Connect with us

Finance

சின்ன சேஞ்சு தான்…ஆனா சிந்திக்க வைக்கிற ரேஞ்சு!…தங்கம் விலை இன்று?..

Published

on

Gold

விடுமுறை தினம் என்பதால் நேற்று முன்தினம் இருந்த அதே விலையில் விற்கப்பட்டு வந்தது நேற்றும்  தங்கம் மற்றும் வெள்ளி. ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை சனிக்கிழமை ஆராயிரத்து ஐனூற்றி பத்து ரூபாய்க்கு (ரூ.6510/-) விற்கப்பட்டது. ஒரு சவரன் விலை ஐம்பத்தி இரண்டாயிரத்து என்பது ரூபாயாக (ரூ.52,080/-)இருந்தது. வெள்ளியின் விலை கிராமிற்கு என்பத்தி ஒன்பது ரூபாயாகவும் (ரூ.89/-), ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை என்பத்தி ஒன்பதாயிரம் ரூபாயாக்கும் விற்கப்பட்டது (ரூ.89,000/-)

சர்வதேச பொருதாளார சூழல், அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இவையே நாள்தோறும் தங்கத்தின் விற்பனை விலையை தீர்மானிக்கும் காரணிகளாக இருந்து வருகிறது. இதனால் விலை நிலவரங்கள் வெளியாகும் முன்னர் இப்படித்தான் இருக்கும் என எவராலும் துல்லியமாக கணித்து சொல்ல முடியாத அளவில் தான் இருந்து வருகிறது தங்கத்தின் விற்பனை விலை.

Silver

Silver

இன்று சென்னையில் ஒரு கிராம் இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத்தங்கத்தின் விற்பனை விலையில் சிறிய மாற்றத்தை கண்டுள்ளது.இதே போலத் தான் வெள்ளியின் நிலவரமும். தங்கம் கிராம் ஒன்றிற்கு ஐந்து (ரூ.5/-) ரூபாய் அதிகரித்து . கடந்த வாரம் மத்திய அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்த பிறகு தொடர்ச்சியாக இறங்குமுகத்திலேயே இருந்த தங்கத்தின் விலை இப்போது மீண்டும் உயர்வு என்கின்ற பாதையை நோக்கி செல்லத்துவங்கியுள்ளது.

வெள்ளியின் விலையிலும் இதே சிறிய அளவிலான மாற்ற நிலை தான் இருந்தது. நேற்றைய விலையை விட இன்று கிராமிற்கு ஐம்பது காசுகள் அதிகரித்து (50/- காசுகள்) என்பத்தி ஒன்பது ரூபாய் ஐம்பது காசுகளுக்கு விற்பனையாகிவருகிறது (ரூ. 89.50/-). ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை என்பத்தி ஒன்பதாயிரத்து ஐனூறு ரூபாய்க்கு (ரூ.89,500/-) விற்பனையாகிறது.

google news