latest news
இந்தியாவிற்கு ஒலிம்பிக்ஸில் முதல் பதக்கம்… யார் இந்த மனு பாக்கர்?…
பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடங்கி நடந்து வருகிறது. இதில் இந்தியாவின் பதக்க கணக்கை துப்பாக்கி சுடுதல் போட்டியில் வென்று முதல் ஆளாக தொடங்கி வைத்திருக்கிறார் மனு பாக்கர். துப்பாக்கி சுடுதலில் வென்ற முதல் பெண் என்ற பெருமையும் மனு பெற்று இருக்கிறார்.
ரியோ ஒலிம்பிக் 2016 மற்றும் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் 2020 ஆகியவற்றில் துப்பாக்கி சுடுதலுக்கு இந்தியாவிற்கு பதக்கம் கிடைக்காமல் இருந்தது. அந்த கவலையை மனு முதல் பதக்கமாக வென்று கொடுத்து சாதித்திருக்கிறார். ஹரியானா மாநிலத்தை சேர்ந்த மனு பாக்கர் 16 வயதிலேயே காமன்வெல்த் போட்டியில் பங்கெடுத்து தங்க பதக்கம் பெற்றவர்.
மனு பாக்கர் டென்னிஸ், ஸ்கேட்டிங் உள்ளிட்டவற்றில் திறமையானவராக இருந்தாலும், ரியோ ஒலிம்பிக்ஸில் துப்பாக்கி சுடுதலை தன்னுடைய இலக்காக மாட்டிக் கொண்டார். யூத் ஒலிம்பிக்ஸில் பங்கெடுத்து பதக்கம் வென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 16 வயதில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்று இந்தியாவின் நம்பிக்கையின் நட்சத்திரமாக ஜொலித்தார்.
மனு பாக்கர் பாரிஸ் ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல், மகளிர் 25 மீட்டர் ஏர் பிஸ்டல், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணி உள்ளிட்ட பிரிவுகளில் மனு பாக்கர் போட்டியிடுகிறார். இதில் 10 ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் முதல் வீராங்கனையாக வெண்கல பதக்கம் வென்று இருக்கிறார். மனு பாக்கருக்கு பயிற்சி கொடுத்தது ஜஸ்பல் ராணா எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனு பாக்கருக்கு மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.