automobile
ரூ. 96 ஆயிரம் பட்ஜெட்டில் 180கிமீ ரேன்ஜ் வழங்கும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்
எலெக்ட்ரிக் வாகன ஸ்டார்ட்-அப் நிறுவனம் கோமகி தனது SE எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலில் அதிக தொழில்நுட்ப அம்சங்களை வழங்கி அப்டேட் செய்து இருக்கிறது. புதிய 2023 கோமகி SE மாடலின் விலை இந்திய சந்தையில் ரூ. 96 ஆயிரத்து 968, எக்ஸ்-ஷோரூம் என்று துவங்குகிறது.
புதிய கோமகி SE மாடலில் லித்தியம் அயன் பாஸ்ஃபேட் ரக பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் எல்இடி லைட்டிங், ரிவர்ஸ் அசிஸ்ட், பார்கிங் அசிஸ்ட், குரூயிஸ் கன்ட்ரோல் என ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. அந்த வகையில் 2023 கோமகி SE மாடல் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
வேரியண்ட் மற்றும் ரேன்ஜ் :
இந்திய சந்தையில் கோமகி SE மாடல்- இகோ, ஸ்போர்ட் மற்றும் ஸ்போர்ட் பெர்ஃபார்மன்ஸ் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. புதிய கோமகி SE எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இகோ வேரியண்ட் முழு சார்ஜ் செய்தால் 75 முதல் அதிகபட்சம் 90 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது.
கோமகி SE ஸ்போர்ட் மாடல் 110 முதல் 140 கிலோமீட்டர்களும், கோமகி SE ஸ்போர்ட் பெர்ஃபார்மன்ஸ் வேரியண்ட் முழு சார்ஜ் செய்தால் 150 முதல் 180 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது.
புதிய மாடல்களின் வேகம் அதன் வேரியண்டிற்கு ஏற்ப கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. கோமகி SE இகோ மாடல் மணிக்கு அதிகபட்சம் 60 கிலோமீட்டர் வேகத்திலும், கோமகி SE ஸ்போர்ட் மற்றும் SE ஸ்போர்ட் பெர்ஃபார்மன்ட் வேரியண்ட் மணிக்கு அதிகபட்சம் 80 கிலோமீட்டர்கள் வேகத்திலும் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
பேட்டரி விவரங்கள் :
இந்திய சந்தையில் புதிய கோமகி SE மாடலில் 3 கிலோவாட் ஹப் மோட்டார் மற்றும் LiFeP04 (லித்தியம் அயன் பாஸ்ஃபேட்) ரக பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரியை நான்கில் இருந்து ஐந்து மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்துவிட முடியும். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இகோ, ஸ்போர்ட் மற்றும் டர்போ என மூன்று விதமான ரைடு மோட்களை கொண்டிருக்கிறது. புதிய SE மாடலில் 20 லிட்டர் பூட் உள்ளது.
இதர அம்சங்கள் :
2023 கோமகி SE எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பார்கிங் அசிஸ்ட், குரூயிஸ் கன்ட்ரோல் மற்றும் ரிவர்ஸ் அசிஸ்ட் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் எல்இடி இன்டிகேட்டர்கள், எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் டூயல் டிஸ்க் பிரேக் சிஸ்டம், கீலெஸ் ஆபரேஷன் மற்றும் ஆன்டி-ஸ்கிட் தொழில்நுட்பம் உள்ளது.
இதில் வழங்கப்பட்டு இருக்கும் டி.எப்.டி. ஸ்கிரீனில் ஆன்போர்டு நேவிகேஷன், சவுன்ட் சிஸ்டம் மற்றும் காலிங் ஆப்ஷன் உள்ளிட்ட ஆப்ஷன்களை இயக்க முடியும்.