Categories: automobilelatest news

கொளுத்தும் வெயில தாங்க முடியல.. ஆட்டோவில் ஏ.சி. பொருத்திய ஓட்டுனர்!

இந்தியர்களின் அறிவாளித் தனம் நம்மை வியக்க வைக்க எப்போதும் தவறியதில்லை. பல்வேறு சமயங்களில் நம்மவர்கள் செய்யும் காரியம் சமூக வலைதளங்களில் வைரல் ஆவதே அதற்கு மிகப் பெரும் சான்று எனலாம். மிகவும் வித்தியாசமான உணவு வகைகளில் தொடங்கி புதுமை மிக்க போக்குவரத்து முறைகள் என இந்திய கலாச்சாரம் வெளிநாட்டவருக்கு எப்போதும் புதுமையான ஒன்றாக இருந்து வந்துள்ளது.

அந்த வரிசையில், தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வரும் வீடியோ ஒன்றில் ஏர் கூலர் பொருத்தப்பட்ட ஆட்டோ அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆட்டோவின் பின்புறம் ஏர் கூலர் பொருத்தப்பட்டு இருக்கிறது. இது தொடர்பான வீடியோவை கபிர் செடியா என்பவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தான் தற்போது இணையம் முழுக்க வேகமாக பரவி வருகிறது.

AC-Auto-1

வாட்டி வதைக்கும் வெயிலில் அனைவரும் புலம்பி தீர்க்கும் நிலையில், உச்சி வெயில் காலத்தில் ஒரு ஆட்டோ அதன் பின்புறம் கூலர் பொருத்தப்பட்ட நிலையில், நகரில் கூலாக வலம் வருவது அனைவரையும் ஒரு நொடி அதிர்ச்சியடைய செய்கிறது. மேலும் சிலர், இந்த யோசனை நமக்கு வரவில்லையே என்று புலம்பவும் வைத்திருக்கிறது.

ஆட்டோவில் இப்படி ஒரு ஏற்பாடு செய்தால் பயனர்கள் குளிர்ந்த அனுபவத்தை பெறலாம் என்று யோசித்த ஆட்டோ ஓட்டுனரை நெட்டிசன்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். ஆட்டோ தொடர்பாக பல்வேறு சம்பவங்கள் நாடு முழுக்க வைரல் ஆகி இருக்கின்றன. ஆனாலும், இந்த வீடியோ உலகில் வேறு எங்கும் இதுபோன்று நடக்க வாய்ப்புகள் குறைவு என்ற சொல்ல வைத்திருக்கிறது.

Photo Courtesy: kabir_setia | Instagram

admin

Recent Posts

5 ஓவரில் 120 ரன்கள்.. இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த பாகிஸ்தான் – இது எப்ப நடந்தது?

ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…

3 weeks ago

விஷயம் டாப் சீக்ரெட், ரகசிய மீட்டிங்.. CSK-ல் ரிஷப் பண்ட்.. முன்னாள் வீரர் ஓபன் டாக்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…

3 weeks ago

நான் இருக்கேன்…மீண்டும் நிரூபித்துள்ள ரவீந்திர ஜடேஜா…

இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…

3 weeks ago

குப்பைகளுக்கு குட்-பை சொன்ன சென்னை மாநகராட்சி…ஒரே நாள்ல இவ்ளோவா?…

பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…

3 weeks ago

நழுவ நினைத்த நாகேஷ்…கெளரவப்படுதிய எம்.ஜி.ஆர்…நடந்தது என்ன தெரியுமா?…

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…

3 weeks ago

சாம்பியன் தான் இருந்தாலும் இவங்க மட்டும் போதும்…கோல்கத்தா அணி எடுத்த முடிவு…

ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…

3 weeks ago