இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் பல்வேறு வடிவம் மற்றும் அளவுகளில் கிடைக்கின்றன. ஒவ்வொருத்தர் பயன்பாடு மற்றும் பட்ஜெட் என்று பல்வேறு விஷயங்களின் அடிப்படையில் சிறந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தேர்வு செய்வது கடினமான காரியம் என்றே கூற முடியும். அந்த வகையில், இந்திய சந்தையில் விற்பனைக்கு கிடைக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களில் சிறந்தவற்றின் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.
இந்த பட்டியலில் புதிய மற்றும் ஏற்கனவே நன்கு அறிமுகமான நிறுவனங்கள் உற்பத்தி செய்த வாகனங்கள் இடம்பெற்றுள்ளன. வழக்கமான பெட்ரோல் என்ஜின் கொண்ட மாடல்களுடன் ஒப்பிடும் போது, இவை சுற்றுச் சூழலுக்கு தீங்கு விளைவிக்காதவை என்பதோடு குறைந்த பராமரிப்பு கட்டணம் மற்றும் குறைந்த செலவில் நீண்ட தூரம் பயணிக்க செய்யும் சவுகரியம் கொண்டிருக்கின்றன.
ஏத்தர் எனர்ஜி 450x Gen 3 :
கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தனது ஃபிளாக்ஷிப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலின் 3rd Gen மாடலை, ஏத்தர் 450x Gen 3 பெயரில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்கூட்டரில் சக்திவாய்ந்த எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 8.7 ஹெச்பி வரையிலான திறன் வெளிப்படுத்துகிறது. மேலும் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 146 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என்று ARAI சான்று பெற்று இருக்கிறது.
ஹீரோ எலெக்ட்ரிக் ஆப்டிமா CX (டூயல் பேட்டரி) :
இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் அதிக யூனிட்களை விற்பனை செய்த நிறுவனங்களில் ஒன்றாக ஹீரோ எலெக்ட்ரிக் உள்ளது. ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் ஆப்டிமா CX மாடலின் டூயல் பேட்டரி மாடல் தற்போது சந்தையில் கிடைக்கும் சிறந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பட்டியலில் இடம்பெற்று இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 140 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என்று சான்று பெற்றுள்ளது.
பஜாஜ் செட்டாக் :
இந்திய இருசக்கர வாகனங்கள் சந்தையில் அதிக பிரபலமான வாகனங்களில் ஒன்றாக பஜாஜ் செட்டாக் விளங்கியது. பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பஜாஜ் செட்டாக் மாடலை எலெக்ட்ரிக் வடிவில் மீண்டும் களமிறக்கி விற்பனை செய்து வருகிறது. இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 108 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. குயிக் சார்ஜிங் வசதி மூலம், இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஐந்து மணி நேரங்களில் முழுமையாக சார்ஜ் செய்துவிட முடியும்.
ஒலா S1 சீரிஸ் :
இந்திய எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் சந்தையில் முன்னணி நிறுவனமாக ஒலா எலெக்ட்ரிக் இருக்கிறது. ஒலா நிறுவனத்தின் S1 மற்றும் S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் முழு சார்ஜ் செய்தால் முறையே 121 மற்றும் 181 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என்று சான்று பெற்றுள்ளன. ஒலா S1 மாடல் மணிக்கு 40 கிலோமீட்டர்கள் வேகத்தை 3.6 நொடிகளில் எட்டிவிடும்.
மேலும் மணிக்கு அதிகபட்சம் 90 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. ஒலா S1 ப்ரோ மாடல் மணிக்கு 40 கிலோமீட்டர்கள் வேகத்தை 3 நொடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு அதிகபட்சம் 115 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கின்றன.
ஹீரோ விடா V1 :
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் துணை பிரான்டு விடா தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சமீபத்தில் இந்திய சந்தையில் களமிறக்கியது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விடா V1 பெயரில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விடா V1 பிளஸ் மற்றும் விடா V1 ப்ரோ என்று இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கிறது.
விடா V1 ப்ரோ மற்றும் V1 பிளஸ் மாடல்கள் மணிக்கு அதிகபட்சம் 80 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கின்றன. விடா V1 ப்ரோ மாடல் மணிக்கு 40 கிலோமீட்டர்கள் வேகத்தில் 3.2 நொடிகளில் எட்டிவிடும். விடா V1 பிளஸ் மாடல் இதே வேகத்தை 3.4 நொடிகளில் எட்டும். ரேன்ஜ்-ஐ பொருத்தவரை விடா V1 ப்ரோ மற்றும் விடா V1 பிளஸ் மாடல்கள் முறையே 163 கிலோமீட்டர்கள் மற்றும் 143 கிலோமீட்டர்கள் ரேன்ஜ் வழங்கும் என்று சான்று பெற்றுள்ளன.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…