Connect with us

automobile

90 கிமீ ரேன்ஜ்.. எக்கச்சக்க அம்சங்கள்.. புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்த பிஎம்டபிள்யூ

Published

on

BMW-CE-02

பிஎம்டபிள்யூ நிறுவனம் CE 02 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மமாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் துவக்க விலை 7 ஆயிரத்து 599 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 6 லட்சத்து 28 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் ஹைலைன் வேரியண்ட் கூடுதல் அம்சங்களை கொண்டிருக்கிறது. இதன் விலை 8 ஆயிரத்து 474 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 7 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

BMW-CE-02-1

BMW-CE-02-1

புதிய பிஎம்டபிள்யூ CE 02 டியுபுலர் ஃபிரேம் மற்றும் டுவின் பேட்டரி பேக்குகளை கொண்டிருக்கிறது. இதில் 2 கிலோவாட் ஹவர் லித்தியம் அயன் பேட்டரி பேக்குகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 90 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என்று கூறப்படுகிறது. பயனர்கள் விரும்பும் பட்சத்தில், இந்த ஸ்கூட்டரை ஒற்றை பேட்டரியில் மட்டும் ஓட்டுவதற்கான ஆப்ஷனும் வழங்கப்படுகிறது.

BMW-CE-02-2

BMW-CE-02-2

இதில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார் 15 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 95 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். இதனை ஸ்டான்டர்டு சார்ஜர் கொண்டு சார்ஜ் செய்ய ஐந்து மணி நேரங்கள் ஆகும். ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தும் போது மூன்று மணி முப்பது நிமிடங்கள் வரை ஆகும்.

BMW-CE-02-3

BMW-CE-02-3

அம்சங்களை பொருத்தவரை இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எல்.இ.டி. லைட்கள், ரிவர்ஸ் கியர், இரண்டு ரைடிங் மோட்கள் மற்றும் ஃபுல் கலர் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ப்ளூடூத் கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஏராளமான அக்சஸரிக்கள் வழங்கப்பட்டுள்ளன. அக்சஸரீக்களை சேர்க்கும் போது இந்த ஸ்கூட்டர் விலை அதிகரிக்கும்.

BMW-CE-02-4

BMW-CE-02-4

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் ஐரோப்பா மற்றும் அமெரிக்க சந்தைகளில் விற்பனைக்கு வர இருக்கிறது. எனினும், இந்த மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புகள் குறைவு தான். இந்தியாவில் பிஎம்டபிள்யூ உடன் கூட்டணி அமைத்து இருக்கும் டிவிஎஸ் நிறுவனம் இதே பிளாட்ஃபார்மில் புதிய வாகனத்தை உருவாக்கலாம் என்று தெரிகிறது.

BMW-CE-02-5

BMW-CE-02-5

எனினும், இதன் விலை சற்று குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது. பிஎம்டபிள்யூ மற்றும் டிவிஎஸ் நிறுவனங்கள் கூட்டணியில் புதிய எலெக்ட்ரிக் வாகனங்கள் உருவாக்கும் பணிகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த எலெக்ட்ரிக் வாகனங்கள் இந்தியா மற்றும் சர்வதேச சந்தைகளில் அறிமுகம் செய்யப்படலாம்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *