Categories: automobilelatest news

ரூ. 49 லட்சம் விலையில் பிஎம்டபிள்யூ 1000சிசி சூப்பர் பைக் அறிமுகம் – அப்படி இதில் என்ன இருக்கு தெரியுமா?

பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் தனது சக்திவாய்ந்த, இந்திய சந்தையில் விலை உயர்ந்த சூப்பர் பைக் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய 2023 பிஎம்டபிள்யூ M 1000 RR, பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் S 1000 RR மாடலின் ஸ்போர்ட் வெர்ஷன் ஆகும். இந்தியாவில் 2023 பிஎம்டபிள்யூ M 1000 RR மாடல் இரண்டு வெர்ஷன்களில் கிடைக்கிறது.

ஸ்போர்ட் மாடல் என்பதால், புதிய பிஎம்டபிள்யூ M 1000 RR மாடலில் ஏரோடைனமிக் மாற்றங்கள், குறைந்த எடை கொண்ட கார்பன் ஃபைபர் பாகங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. முழுமையாக உருவாக்கப்பட்ட நிலையில் இந்த மாடல்கள் இந்தியா கொண்டுவரப்படுகின்றன. நாடு முழுக்க இயங்கி வரும் அங்கீகரிக்கப்பட்ட விற்பனை மையங்களில் புதிய 2023 பிஎம்டபிள்யூ M 1000 RR மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

BMW-M1000-RR 2

டிசைன் :

தோற்றத்தில் பிஎம்டபிள்யூ M 1000 RR மாடலின் பாடிவொர்க் கிட்டத்தட்ட S 1000 RR மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. எனினும், இதில் கார்பன் ஃபைபர் பாகங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. இத்துடன் விங்லெட்கள், கார்பன் வீல்கள், பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் M தீம் பெயின்ட் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் சேசிஸ் அலுமினியம் பிரிட்ஜ் ஃபிரேமில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

BMW-M1000-RR 3

இத்துடன் அப்சைடு-டவுன் ஃபோர்க்குகள், சென்ட்ரல் சஸ்பென்ஷன் யூனிட் உள்ளது. இந்த சூப்பர் பைக் ஏரோடைனமிக் டிசைனுடன் ஒற்றுப்போகும் வகையில் முன்புற மட்கார்டுகள் விசேஷமான வடிவமைக்கப்பட்டு உள்ளன. இவை ஃபோர்க் லெக் மற்றும் பிரேக் கேலிப்பர்கள் இடையே காற்றோட்டத்தை பயணிக்க செய்கிறது.

BMW-M1000-RR 4

என்ஜின் :

பிஎம்டபிள்யூ M 1000 RR 2023 எடிஷனில் 999சிசி, இன்லைன், நான்கு சிலிண்டர்கள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 211 ஹெச்பி பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. மேலும் பை-டைரெக்‌ஷனல் குயிக்‌ஷிஃப்டர் மற்றும் ஸ்லிப்-அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது.

BMW-M1000-RR

புதிய பிஎம்டபிள்யூ M 1000 RR மாடல் மணிக்கு அதிகபட்சம் 314 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் ஏபிஎஸ் டிராக்‌ஷன் கண்ட்ரோல், ஸ்லைடு கண்ட்ரோல், ஏழு ரைடு மோட்கள் (ரெயின், ரோடு, டைனமிக், ரேஸ் மற்றும் ரேஸ் ப்ரோ 1, 2 மற்றும் 3) வழங்கப்பட்டு உள்ளது. இவை தவிர லான்ச் கண்ட்ரோல், வீலி கண்ட்ரோல், ஸ்டீரிங் ஸ்டேபிலைசர், குரூயிஸ் கண்ட்ரோல், டிராப் சென்சார், ஹில் ஸ்டார்ட் போன்ற வசதிகள் உள்ளன.

admin

Recent Posts

5 ஓவரில் 120 ரன்கள்.. இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த பாகிஸ்தான் – இது எப்ப நடந்தது?

ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…

3 weeks ago

விஷயம் டாப் சீக்ரெட், ரகசிய மீட்டிங்.. CSK-ல் ரிஷப் பண்ட்.. முன்னாள் வீரர் ஓபன் டாக்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…

3 weeks ago

நான் இருக்கேன்…மீண்டும் நிரூபித்துள்ள ரவீந்திர ஜடேஜா…

இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…

3 weeks ago

குப்பைகளுக்கு குட்-பை சொன்ன சென்னை மாநகராட்சி…ஒரே நாள்ல இவ்ளோவா?…

பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…

3 weeks ago

நழுவ நினைத்த நாகேஷ்…கெளரவப்படுதிய எம்.ஜி.ஆர்…நடந்தது என்ன தெரியுமா?…

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…

3 weeks ago

சாம்பியன் தான் இருந்தாலும் இவங்க மட்டும் போதும்…கோல்கத்தா அணி எடுத்த முடிவு…

ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…

3 weeks ago