automobile
வெறும் ஆயில் மாற்ற இத்தனை லட்சங்களா? தலைசுற்ற வைக்கும் புகாட்டி கார் பராமரிப்பு கட்டணம்!
உலகின் மிகவும் பிரபலமான ஹைப்பர் கார் மாடல்களை புகாட்டி நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. மிகவும் அரிதான மாடல்களே உள்ள் ஹைப்பர் கார் சந்தையில் புகாட்டி நிறுவன மாடல்கள் அதிவேகமாத செல்வதில், முந்தைய சாதனகளை முறியடிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளன. அதிக பெருமைகளுக்கு சொந்தம் கொண்டிருக்கும் போதிலும் இவற்றை சொந்தமாக வைத்திருப்பதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.
அதில் ஒன்று இவற்றை பராமரித்தல் ஆகும். புகாட்டி கார்களை பராமரிக்க எவ்வளவு செலவாகும் என்று தெரியுமா? மிகவும் ஆடம்பர விலை கொண்ட ஹைப்பர் கார் மாடல்களான புகாட்டி வேய்ரோனை பராமரிக்க எவ்வளவு செலவாகும் என்ற விவரங்களை ரியல் எஸ்டேட் துறை நிபுணரும், கார்களை வாங்கி சேகரிப்பவருமான மேனி ஷோபின் வெளியிட்டுள்ளார்.
புகாட்டி வேய்ரோனுக்கு ஆயில் மாற்றுவதற்கு ஒரு ஆண்டிற்கு இந்திய மதிப்பில் 25 ஆயிரம் டாலர்கள், ரூ. 20 லட்சத்து 54 ஆயிரம் வரை ஆகும் என்று அவர் தெரிவித்து உள்ளார். புகாட்டி சர்வீஸ் செய்யும் நபர், காரின் பின்புற டயர்கள் மற்றும் பிரேக்குகளை கழற்றி, ஃபென்டர்களில் உள்ள லைனிங்கை எடுத்து, காரின் கீழ்புறமாக 16 டிரைனேஜ் பிளக்-களை சுத்தம் செய்து, அதன் பின் ஆயில் மாற்றுவார்.
ஆயில் மாற்றுவதற்கே இவ்வளவு செலவாகும் போது, கார் டயர்களுக்கு எவ்வளவு செலவாகும்? புகாட்டி வேய்ரோன் மாடலுக்கான டயர்களை மாற்றுவதற்கு 38 ஆயிரம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 31 லட்சத்து 23 ஆயிரம் வரை செலவாகும். புகாட்டி நிறுவனம் கார் டயர்களை சில ஆண்டுகள் இடைவெளியில் மாற்ற பரிந்துரைக்கிறது.
வெய்ரோன் மாடலின் வீல்களை மாற்ற ஒரு செட் ரிம்-க்கு மட்டும் 50 ஆயிரம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 41.1 லட்சம் ஆகும். மேலும் புகாட்டி வேய்ரோன் மாடலின் ரிம்களை ஒவ்வொரு 16 ஆயிரம் கிலோமீட்டர்களில் மாற்ற வேண்டுமாம். புகாட்டி வெய்ரோனின் மேம்பட்ட வெர்ஷனாக சிரான் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடலை பராமரிக்க எவ்வளவு செலவாகும் என்ற விவரங்களை ஹேமில்டன் கலெக்ஷன் வெளியிட்டு உள்ளது.
புகாட்டி சிரான் மாடலை சர்வீஸ் செய்ய ஆண்டிற்கு 11 ஆயிரத்து 500 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 9 லட்சத்து 45 ஆயிரம் ஆகும். கார் வாரண்டியில் இல்லையெனில், சர்வீஸ் செய்வதற்கான கட்டணம் 34 ஆயிரம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 27 லட்சத்து 94 ஆயிரம் ஆகும். இது காரை நான்கு ஆண்டுகள் பராமரிப்பதற்கான செலவு ஆகும்.
இந்த காரின் 8.0 லிட்டர் குவாட் டர்போ W16 என்ஜினை மாற்ற இந்திய மதிப்பில் ரூ. 7.03 கோடி வரை செலவாகும். இதன் டுவின் கிளட்ச் கியர்பாக்ஸ்-ஐ மாற்ற 1 லட்சத்து 85 ஆயிரம் டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 1 கோடியே 52 லட்சம் வரை செலவாகும். இதில் உள்ள டிஸ்க்களை மாற்ற 18 ஆயிரம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 14 லட்சத்து 79 ஆயிரம் செலவாகும்.
டிஸ்க் பேட்களை மட்டும் மாற்றுவதற்கு 18 ஆயிரம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 14 லட்சத்து 79 ஆயிரம் வரை செலவாகும். இதன் முன்புற டிஸ்க் பேட்களுக்கு 6 ஆயிரத்து 700 டாலர்கள், இந்திய மத்ப்பில் ரூ. 5.5 லட்சம் செலவாகும். பின்புற பேட்களை மாற்ற ஓரளவுக்கு கட்டணம் குறைவு எனலாம். இதற்கு 4 ஆயிரம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 3 லட்சத்து 28 ஆயிரம் வரை செலவாகும்.