automobile
ஒரே அறிவிப்பு.. மொத்தமும் போச்சு.. எரிச்சலில் எலெக்ட்ரிக் 2 வீலர் உற்பத்தியாளர்கள்.. என்ன ஆச்சு தெரியுமா?
இந்தியாவில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன விற்பனை கடந்த பல மாதங்களாக அமோகமாக நடைபெற்று வந்தது. ஆனால், சந்தை வல்லுனர்களின் கணிப்பு இது நீண்ட காலத்திற்கு நீடிக்காது என்று தெரிவித்து இருக்கிறது. அதன்படி இந்தியாவில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் விற்பனை வரும் மாதங்களில் சரிவடைய வாய்ப்புகள் இருப்பதாக சந்தை வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர்.
வல்லுனர்களின் கணிப்பு மற்றும் அதிர்ச்சகர தகவலுக்கு காரணம் மத்திய அரசின் நடவடிக்கை தான். இந்தியாவில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில், மத்திய அரசு சார்பில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு வாகனங்களில் வழங்கப்படும் பேட்டரி திறனுக்கு ஏற்ப மானியம் வழங்கப்பட்டு வந்தது.
எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் கிடைப்பதாக வெளியான அறிவிப்பு காரணமாக பலர் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை வாங்குவதில் ஆர்வம் செலுத்தி வந்தனர். இந்த நிலையில், கடந்த ஜூன் 2023 மாதத்தில் இருந்கு எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மத்திய அரசு வழங்கி வந்த மானியத்தொகை பெருமளவில் குறைக்கப்பட்டு விட்டது. இதன் காரணமாக பல்வேறு எலெக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தியாளர்களும் தங்களின் வாகன விலையை உயர்த்தினர்.
மத்திய அரசு வெளியிட்ட சமீபத்திய அறிவிப்பின் படி எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மானியம் ஜூன் மாதத்தில் இருந்து குறைக்கப்பட்டு விடும் என்றும், எதிர்காலத்தில் இந்த மானிய தொகை முழுமையாக ரத்து செய்யப்பட்டு விடும் என்று தெரிவித்து இருக்கிறது.
ஜூன் 1 ஆம் தேதி அமலுக்கு வந்த புதிய அறிவிப்பு காரணமாக பலர் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் வாங்கும் திட்டத்தை ஒத்தி வைக்கவும், ஒருதரப்பினர் வேறு வாகனங்களை வாங்கிக் கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதன் காரணமாக கடந்த ஜூன் 2023 மாதத்தில் மட்டும் இந்தியாவில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் விற்பனை கிட்டத்தட்ட 60 சதவீதம் வரை சரிவடைந்து உள்ளது.
2013 ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் விற்பனை 2 ஆயூரம் யூனிட்களாக இருந்தது. 2023 நிதியாண்டு நிறைவின் போது இந்த எண்ணிக்கை 7.4 லட்சங்களாக அதிகரித்து இருந்தது. விற்பனையை பொருத்தவரை கடந்த ஜூன் 26 ஆம் தேதி வரையிலான நிலவரப்படி இந்திய சந்தையில் 35 ஆயிரத்து 464 எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன.
முந்தைய 2923 மே மாதத்தில் மட்டும் இந்தியாவில் 1 லட்சத்து 5 ஆயிரம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டன. அந்த வகையில் மாதாந்திர அடிப்படையில் பார்க்கும் போது இந்தியாவில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் விற்பனை 60 சதவீதம் வரை சரிவடைந்துள்ளது. ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் போது இது 57 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. ஏப்ரல் 2023 மாதத்தில் 66 ஆயிரத்து 724 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது.
இந்தியாவில் ஜூன் 1 ஆம் தேதியில் இருந்து ஃபேம் 2 திட்டத்தின் கீழ் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியம் குறைக்கப்பட்டது. முன்னதாக 40 சதவீதம் வரை மானியம் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது வெறும் 25 சதவீதம் தான் மானியமாக வழங்கப்படுகிறது.