அமெரிக்காவை சேர்ந்த இருசக்கர வாகன உற்பத்தியாளர் ஹார்லி டேவிட்சன் இந்திய சந்தையில், நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த X440 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. புதிய அட்வென்ச்சர் பைக் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய ஐந்து விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
விலை மற்றும் வேரியண்ட் :
புதிய ஹார்லி டேவிட்சன் X440 மாடல்: டெனிம், விவிட் மற்றும் எஸ் என்று மொத்தம் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதின் டெனிம் பேஸ் வேரியண்ட் ஆகும். ‘எஸ்’ மாடல் டாப் எண்ட் வேரியண்ட் ஆகும்.
விலையை பொருத்தவரை ஹார்லி டேவிட்சன் X440 டெனிம், விவிட் மற்றும் எஸ் வேரியண்ட்களின் விலை முறையே ரூ. 2 லட்சத்து 29 ஆயிரம், ரூ. 2 லட்சத்து 49 ஆயிரம் மற்றும் ரூ. 2 லட்சத்து 69 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
டிசைன் :
ஹார்லி டேவிட்சன் X440 மாடல் தோற்றத்தில் சற்று பிரமான்டமாக காட்சியளிக்கிறது. இந்த மாடலில் மஸ்குலர் ஃபியூவல் டேன்க், மெல்லிய டெயில் பகுதி உள்ளது. இத்துடன் பைக் முழுக்க வட்ட வடிவ டிசைன் பாகங்கள் மூலம் நியோ ரெட்ரோ தோற்றம் வழங்கப்பட்டு இருக்கிறது. நிறங்களை பொருத்தவரை இந்த மாடல்- மஸ்டர்டு டெனிம், மெட்டாலிக் டார்க் சில்வர், மெட்டாலிக் திக் சில்வர் மற்றும் மேட் பிளாக் என நான்கு ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில் முதல் மற்றும் கடைசி நிறங்கள் பேஸ் மற்றும் டாப் எண்ட் வேரியண்ட்களில் மட்டும் பிரத்யேகமாக வழங்கப்படுகின்றன.
பவர்டிரெயின் :
புதிய ஹார்லி டேவிட்சன் X440 மோட்டார்சைக்கிளில் சிங்கில் சிலிண்டர், ஆயில் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 27 ஹெச்பி பவர், 38 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
ஹார்டுவேர் :
ஹார்லி டேவிட்சன் X440 மாடலில் டூயல் கேட்ரிட்ஜ் டேம்பிங் சிஸ்டம் கொண்ட 43 மில்லிமீட்டர் அளவு யுஎஸ்டி முன்புற ஃபோர்க்குகள், பின்புறம் கியாஸ் ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் இருபுறமும் டிஸ்க் பிரேக்குகள், டூயல் சேனல் ஏபிஎஸ் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இவைதவிர புதிய மாடலின் ஹார்டுவேர் அம்சங்கள் பற்றி ஹார்லி டேவிட்சன் இதுவரை எந்த தகவலும் வழங்கவில்லை.
அம்சங்கள் :
அம்சங்களை பொருத்தவரை புதிய ஹார்லி டேவிட்சன் X440 மாடலில் ஆல்-எல்இடி லைட்டிங், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஆம்பியன்ட் லைட் சென்சார், ப்ளூடூத் கனெக்டிவிட்டி மற்றும் பல அம்சங்கள் உள்ளன. இத்துடன் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், கால் ஆன்சர், மியூசிக் கன்ட்ரோல், டிஸ்டன்ஸ்-டு-எம்ப்டி மற்றும் கியர் பொசிஷன் போன்ற வசதிகள் உள்ளன.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…