டொயோட்டா கசூ (Gazoo) ரேசிங் தனது முதல் பேட்டரி ப்ரோடோடைப் சோதனையை துவங்கி இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் திட்டத்தில் டொயோட்டா நிறுவன தலைவர் அகியோ டொயோட்டா தனிப்பட்ட முறையில் ஆர்வம் செலுத்தி வருகிறார். இந்த கார் அதன் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்கிறதா என்று அகியோ டொயோடா ஒவ்வொரு கட்டத்திலும் உறுதிப்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
சமீபத்தில் நடைபெற்ற லி மேன்ஸ் 24 ஹவர்ஸ் நிகழ்ச்சியில் பேசிய அகியோ டொயோட்டா, புதிய ஸ்போர்ட்ஸ் கார் தற்போதைய கம்பஷன் என்ஜின் மாடல்களை போன்று ஓட்டுவதற்கு சிறப்பான மாடலாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்து இருந்தார். டொயோட்டா நிறுவனத்தின் GR86, GR சுப்ரா, GR யாரிஸ் மற்றும் GR கொரோலா போன்ற மாடல்கள் இந்த பிரிவில் மிகவும் பிரபலமானவை ஆகும்.
“இந்த காரின் ஆரம்பக்கட்டம், இதில் எந்த பவர்டிரெயின் உள்ளது என்பதில் இல்லை, எந்த பவர்டிரெயின் இருந்தாலும், ஓட்டும் போது அது எத்தகைய மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது என்பதில் தான் உள்ளது. நாங்கள் உருவாக்கி வரும் GR பேட்டரி எலெக்ட்ரிக் வாகனத்தை சமீபத்தில் டெஸ்ட் டிரைவ் செய்வதற்கான வாய்ப்பை பெற்றேன்.”
“இது தற்போதைக்கு சந்தையில் அறிமுகமாகுமா என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது, ஆனால், இது போன்ற கார்களை உருவாக்குவதற்கு முக்கிய காரணம், இவற்றில் எத்தகைய பவர்டிரெயின் இருந்தாலும், இவற்றை ஓட்டும் போது இந்த கார்கள் எவ்வளவு மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றன என்பதில் தான் உள்ளது,” என அகியோ டொயோடா தெரிவித்தார்.
இந்த காரில் தற்போதைய கம்பஷன் என்ஜின் கொண்ட மாடல்களில் உள்ள பெரும்பாலான அம்சங்கள் வழங்கப்படும் என்று டொயோட்டா தெரிவித்துள்ளது. அதன்படி இதில் கிளட்ச், கியர்பாக்ஸ் மற்றும் தற்போதைய என்ஜின்கள் வெளிப்படுத்தும் சத்தம் முதற்கொண் இடம்பெற்று இருக்கும்.
“நாங்கள் உருவாக்கி வரும் பேட்டரி எலெக்ட்ரிக் வாகனத்திற்கும் மற்ற எலெக்ட்ரிக் வாகனங்களுக்கும் உள்ள வித்தியாசம், GR BEV-யில் இருக்கும் போது பெட்ரோல், டீசல் வாசத்தை தவிர்த்து, என்ஜின் சத்தம் வரை நீங்கள் கேட்க முடியும். மேலும் இதில் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் கிளட்ச் உள்ளது. இந்த கார் பற்றிய விவரம் அறியாதவர்களிடம், காரை ஓட்ட சொன்னால், அவர்களாலேயே எந்த வித்தியாசத்தையும் கண்டுபிடிக்க முடியாது,” என்று அகியோ டொயோடா தெரிவித்து உள்ளார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…