Connect with us

automobile

125சிசி திறன் கொண்ட 2 பிரீமியம் மாடல்கள் – ஹீரோ மோட்டோகார்ப் திட்டம்!

Published

on

hero

இந்திய இருசக்கர வாகனங்கள் சந்தையின் 100சிசி பிரிவில் முன்னணி நிறுவனம் ஹீரோ மோட்டோகார்ப். சமீபத்தில் பேஷன் பிளஸ் மாடல், விரைவில் எக்ஸ்டிரீம் மாடல் என தொடர்ச்சியாக வாகனங்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஹீரோ நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது 125சிசி வாகனங்கள் பிரிவை விரிவுப்படுத்த திட்டமிட்டு வருவது தெரியவந்துள்ளது.

hero 125 cc

hero 125 cc

125சிசி பிரிவில் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் மோட்டார்சைக்கிள்கள் பெரும்பாலும் கம்யுட்டர் ரக மாடல்களாகவே உள்ளன. இந்த பிரிவில் ஒற்றை ஸ்போர்ட் மாடலாக டி.வி.எஸ். ரைடர் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் மிக குறுகிய காலக்கட்டத்தில் விற்பனையில் மூன்று லட்சத்திற்கும் அதிக யூனிட்களை கடந்து அசத்தி இருக்கிறது.

ஹீரோ நிறுவனம் 125சிசி கம்யுட்டர் மாடல்கள் பிரிவில் கிளாமர் மற்றும் சூப்பர் ஸ்பிலென்டர் போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது. எனினும், ஸ்போர்ட் அம்சங்கள் நிறைந்த மாடல் எதுவும் ஹீரோ தரப்பில் இதுவரை அறிமுகம் செய்யப்படவில்லை. இதன் காரணமாக டி.வி.எஸ். ரைடர் மாடலுக்கு போட்டியாக ஹீரோ புதிய பைக்கை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஹீரோ உருவாக்கி வரும் புதிய மாடல் மஸ்குலர் தோற்றம், கூர்மையான பாகங்களை கொண்டிருக்கும் என அதன் வரைபடங்களின் மூலம் தெரியவந்துள்ளது. இதன் மூலம் புதிய 125சிசி மாடல் அசத்தலான தோற்றம் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. ஹீரோ நிறுவனம் புதிய மாடலுக்காக அதிநவீன, லிக்விட் கூல்டு என்ஜினை உருவாக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

hero new bike

hero new bike

இது உண்மையாகும் பட்சத்தில் புதிய மாடல் கே.டி.எம். 125 டியூக் மாடலுக்கு போட்டியாக அமையும். இந்த பிரிவில் இத்தகைய என்ஜின் கொண்ட ஒற்றை மாடலாக கே.டி.எம். 125 டியூக் இருக்கிறது. ஸ்போர்ட் மாடல் தவிர ஹீரோ நிறுவனம் மற்றொரு புதிய 125சிசி பைக்கை உருவாக்கி வருகிறது. இது கம்யுட்டர் பிரிவில் நிலைநிறுத்தப்படும் என்று தெரிகிறது.

கிளாமர் போன்றே இந்த மாடல் சாதாரன அம்சங்கள் மற்றும் எளிய மோட்டார் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கலாம். புதிய மாடலில் ஹீரோ கனெக்ட் லோகோ இடம்பெற்று இருப்பதால், இதில் ஹீரோ நிறுவனத்தின் XTEC ப்ளூடூத் தொழில்நுட்பம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். புதிய மாடல் பற்றிய விவரங்கள் தற்போது தான் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில், இதன் வெளியீட்டை தற்போதைக்கு எதிர்பார்க்க முடியாது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *