Connect with us

automobile

வேற வழி தெரியலங்க.. வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ் கொடுத்த ஹீரோ மோட்டோகார்ப்!

Published

on

Hero-Motocorp-Featured img

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்திய சந்தையில் தனது மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் மாடல்களின் விலை உயர்த்தப்படுகிறது. விலை உயர்வு இன்று (ஜூலை 3) அமலுக்கு வருகிறது. இந்த முறை விலை உயர்வு 1.5 சதவீதம் என்று நிர்ணயம் செய்யப்பட்டஉ உள்ளது. விலை உயர்வு ஒவ்வொரு மாடலுக்கு ஏற்ப வேறுபடும் என்று ஹீரோ மோட்டோகார்ப் தெரிவித்து இருக்கிறது.

Hero-Motocorp-Bikes

Hero-Motocorp-Bikes

விலை ரிவ்யூவின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது, விலை நிர்ணயம், செலவீனங்கள் உள்ளிட்டவைகளே விலை உயர்வுக்கு காரணம் என்று ஹீரோ மோட்டோகார்ப் தெரிவித்து இருக்கிறது. 2023 ஆண்டு ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் பல்வேறு மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. சமீபத்தில் தான் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்திற்கு புதிய தலைமை செயல் அதிகாரியாக நிரஞ்சன் குப்தா நியமனம் செய்யப்பட்டார்.

Harley-Davidson-X440-1

Harley-Davidson-X440-1

கடந்த மாதம் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் எக்ஸ்டிரீம் 160r 4V மாடலை அறிமுகம் செய்தது. ஜூன் மாதத்தின் இரண்டாவது வாரம் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது வாகன விற்பனை விவரங்களை அறிவித்தது. அதன்படி புதிய மாடல் அல்லது மேம்பட்ட வாகனத்தை மிக குறுகிய காலக்கட்டத்தில் அறிமுகம் செய்வது மற்றொன்று வாடிக்கையாளர்களுக்கு பிரீமியம் ரிடெயில் அனுபவத்தை வழங்குவது என்று அந்நிறுவனம் தெரிவித்தது.

Harley-Davidson-X440

Harley-Davidson-X440

வரும் மாதங்களில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிய வாகனங்களை அறிமுகம் செய்ய திட்ட்மிடுள்ளது. இதில் முற்றிலும் புதிய கரிஸ்மா, ஹார்லி டேவிட்சன் X440 போன்ற மாடல்கள் இடம்பெற்று இருக்கும் என்று தெரிகிறது. ஹார்லி டேவிட்சன் X440 மாடலில் ஆயில் கூல்டு 440சிசி, சிங்கில் சிலிண்டர் யூனிட், 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

இந்திய சந்தையில் X440 மாடல் ஜூலை 4-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் விலை ரூ. 2.5 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 3 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது. இந்த மாடல் இந்தியாவில் ராயல் என்பீல்டு மற்றும் ஹோண்டா நிறுவனங்களின் 350 சிசி மாடல்களுக்கு போட்டியாக அமைய இருக்கிறது.

google news