Connect with us

automobile

ஹோண்டாவின் புதிய ஷைன் 125 அறிமுகம்..! பிஎஸ்-6 பேஸ்-2வில் புதுசா என்ன இருக்கு தெரியுமா..?

Published

on

honda shine 125

ஜப்பானிய டூவீலர் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா இந்தியாவில் ஷைன் 125வின் 2023 மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த வண்டி 125 சிசி பிரிவில் விற்பனையில் நம்பர் ஒன் இடத்தை பிடிக்கிறது. இந்தியாவில் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட பிஎஸ்-6 கொள்கையின்படி இந்த வண்டி தயார் செய்யப்பட்டுள்ளது. இதில் குறைந்த மாசு வெளிப்படுத்துகிறது. மேலும் இது e20 எரிபொருளில் இயங்கக் கூடியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

honda shine 125

honda shine 125

சிறப்பம்சங்கள் :

புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த 125 PGM-FI உடன் வருகிறது. இதில் இந்திய அரசாங்கத்தின் போக்குவரத்து முறைக்கு ஏற்ப தயார் செய்யப்பட்டிருக்கிறது. மேலும் esp வசதியையும் கொண்டுள்ளது. இதில் 5 கியர்கள் கொண்ட கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த எஞ்சின் செயல் திறனை மேம்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இதனுடன் பின்பக்க பிரேக்கை அழுத்தும் போது முன்பக்க பிரேக்கும் சேர்ந்து பிடிக்குமாறு இண்டெகரேட் பிரேக்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது.

சைடு-ஸ்டேண்ட் கட் ஆப் வசதி , ஹாலஜன் முகப்பு விளக்கு,எஞ்சின் கில் ஸ்விட்ச் , மூடி இருக்கும் செயின் , அனலாக் ஸ்பீடோமீட்டர். மேலும் இதை சத்தம் இல்லாமல் ACG மோட்டார் கொண்டு வண்டியை ஸ்டார்ட் செய்யப்படுகிறது. மேலும் இதன் பராமரிப்பு செலவு மிகக் குறைவு.

இந்த வண்டி ஐந்து பொதுவித வண்ணங்களில் கிடைக்கப் பெறுகிறது. தரை மட்டத்திலிருந்து இதன் உயரம் 162 எம்எம் ஆக. இதன் இருக்கையின் நீளம் 651 எம் எம் ஆக உள்ளது. தரை மட்டத்திலிருந்து இருக்கையின் உயரம் 791 எம் எம். இது அனைத்து உயர மக்களுக்கும் பயணத்தை எளிதாகும் வகையில் இருக்கும்.

honda shine 125

honda shine 125

10 வருட உத்தரவாதம் :

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஹோண்டா சைன் 125 மக்களிடையே மிகப் பெரிய நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக 10 வருட உத்தரவாதி வழங்குகிறது. அதில் நிறுவனம் சார்பில் மூன்று வருட உத்திரவாதமும். கூடுதலாக ஏழு வருடம் உத்தரவாதமும் வழங்குகிறது. இதன் மூலம் 10 வருட உத்திரவாதம் கிடைக்கப்பெறுகிறது.

விலை :

இந்த வாகனம் இரண்டு வகைகளில் கிடைக்கிறது. ட்ரம் மட்டும் டிஸ்க் பிரேக் வகைகளில் கிடைக்கிறது. அதில் ட்ரம்பேக்கின் விலை 79000 ரூபாய் எக்ஸ்ஷோரூம் வரும் விலையில் கிடைக்கிறது.  டிஸ்க் பிரேக் மாடல் 83000 ரூபாய் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *