automobile
ஹீரோவின் பிளசர் பிளஸ் அறிமுகம்..! இப்போ அதிக மைலேஜ் உடன் இவ்வளவு குறைந்த விலையிலா..?
நாட்டில் உள்ள அனைத்து நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு தங்களுடைய ஸ்கூட்டர்களை சந்தைப்படுத்தி விற்பனை செய்து வருகின்றனர். இதில் இந்தியாவின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ ஸ்கூட்டர் பிரிவில் அதன் மிகப் பிரபலமான பிளசர் பிளஸ் ஐ அறிமுகப்படுத்துகிறது. ஹீரோ நிறுவனத்திற்கு இன்று வரை பிளசர் பிளஸ் மிகவும் அதிக விற்பனையில் கலக்கி கொண்டு இருக்கிறது.
நீங்கள் முதல்முறையாக ஒரு ஸ்கூட்டரை வாங்கப் போறீர்கள் என்றால் ஹீரோ நிறுவனத்தின் இந்த ஸ்கூட்டரை தாராளமாக கவனத்தில் கொள்ளலாம். இந்த வண்டியில் 110சிசி என்ஜின் கொண்டு வருகிறது. மேலும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் வருகிறது. இதன் மூலம் ஹீரோ பிளசர் பிளஸ் ஸ்கூட்டர் அதிக மைலேஜ் தரக்கூடியதாகவும் குறைந்த விலையில் கிடைக்கக் கூடியதாகவும் உள்ளது.
ஸ்கூட்டர் கம்பீர தோற்றத்துடன் கூடிய ஹெட்லேம்ப்கள் மற்றும் ஏப்ரனில் இண்டிகேட்டர்களைப் பெறுகிறது. இதன் மொத்த எடை 104 கிலோ கிராம் ஆக உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகளில் வளைந்து நெளிந்து செல்வது குறுகிய பாதையில் செல்வதும் எளிதாக இருக்கும். இது 4.8 லிட்டர் எரிபொருள் நிரப்பும் கொள்ளளவை கொண்டுள்ளது.
பிரேக்கிங் சிஸ்டம் :
இது ட்ரம் பிரேக் உடன் வருகிறது மற்றும் காம்பி பிரேக் எனப்படும் பின்பக்க பிரேக்கை அழுத்தும்போது முன்பக்க பிரேக்கும் சேர்ந்து அழுத்தி வேகத்தை குறைக்கும். இதில் 110 சிசி கொண்ட எஞ்சின் வருகிறது.
மேலும் இதனுடன் முன்பக்கம் மற்றும் பின்பக்க பகுகுதிகளில் எல்இடி கொண்ட விளக்குகள் வருகின்றன. மேலும் இதனுடன் போன் மூலம் ப்ளூடூத்தையும் இணைக்கலாம்.
போட்டியாளர்கள் :
சேமிப்பிற்கு போதுமான இடவசதியும், இரண்டு லக்கேஜ் கொக்கிகளும் உள்ளன. சந்தையில் இதன் போட்டியாளர்களான டிவிஎஸ் ஜஸ்ட் ஒன் டைம் ஹோண்டா ஆக்டிவா 6ஜி மற்றும் டி வி எஸ் இ ஜூபிட்டர் 110. உடன் கடும் போட்டியை ஈடுபடுகிறது நீங்கள் ஒரு சிறந்த ஸ்கூட்டரை வாங்க விரும்பினால் ஹீரோ ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
விலை :
இது மூணு வேரியன்ட் மட்டும் எட்டு கலர் வகைகளில் கிடைக்கிறது. இந்த வாகனம் பி-எஸ் 6 கொள்கையின்படி வருகிறது. இதன் தொடக்க மாடலின் விலை 69,600 முதல் உயரிய மாடலின் விலை 73,000 ரூபாய் எக்ஸ் ஷோரூம் விலையில் கிடைக்கப்பெறுகிறது.