Connect with us

automobile

இனி எங்க ஆட்டம் வேற மாதிரி இருக்கும்..! ஆக்‌ஷன் மோடில் ஃபிளாக்‌ஷிப் காரை களமிறக்கும் கியா.!

Published

on

Kia-EV-9-Featured-img

தனது ஃபிளாக்‌ஷிப் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி.- EV9 மாடலை அடுத்த ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் கியா நிறுவனம் தனது EV9 கான்செப்ட் மாடலை காட்சிக்கு வைத்திருந்தது. இதன் ப்ரோடக்‌ஷன் வெர்ஷன் மார்ச் 2023 மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.

Kia-EV9-4

Kia-EV9-4

கியா இந்தியா நிறுவனம் அறிவித்து இருக்கும் புதிய கியா 2.0 யுத்தியின் கீழ் அடுத்த சில ஆண்டுகளில் இந்திய சந்தையில் பத்து சதவீதம் பங்குகளை பிடிக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. புதிய யுத்தியின் கீழ் கியா நிறுவனம் EV9 போன்று பல்வேறு மாடல்களை அறிமுகம் செய்யவும், டச்பாயிண்ட்களின் எண்ணிக்கையை 600 ஆக அதிகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.

EV9 மாடலை பொருத்தவரை, இந்த ஆல்-எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என்றும் இது EV6-ஐ தொடர்ந்து இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் இரண்டாவது எலெக்ட்ரிக் கார் மாடலாக இருக்கும்.

Kia-EV9-1

Kia-EV9-1

கியா எலெக்ட்ரிக் வாகன யுத்தி :

“அடுத்த ஆண்டு, நாங்கள் EV9 மாடலை கொண்டுவர திட்டமிட்டு வருகிறோம், எலெக்ட்ரிக் வாகன பிரிவில் இது எங்களின் டாப் எண்ட் வாகனம் ஆகும்,” என்று கியா இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டே ஜின் பார்க் தெரிவித்துள்ளார்.

Kia-EV9-3

Kia-EV9-3

கியா நிறுவனம் இந்திய சந்தையில் தனது எலெக்ட்ரிக் வாகனங்களை டாப்-டவுன் யுத்தியில் வைத்திருக்க திட்டமிடுகிறது. புதிய EV9 மற்றும் EV6 மாடல்கள் பிரீமியம் பிரிவில் நிலை நிறுத்தப்பட்டு உள்ளன. இந்த இரு மாடல்களை தொடர்ந்து இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இது 2025 வாக்கில் விற்பனையகம் வர திட்டமிடப்பட்டு உள்ளது.

விலை உயர்ந்த மாடல் :

சர்வதேச சந்தையில் கியா EV9 மாடல் அந்நிறுவனத்தின் விலை உயர்ந்த எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. ஆகும். முன்னாள் பி.எம்.டபிள்யூ. ஸ்டைலிஸ்ட் கரிம் ஹபிப் ஆலோசனையில் முழுக்க முழுக்க கியா வடிவமைத்த முதல் எலெக்ட்ரிக் வாகனம் கியா EV9 ஆகும். EV9 மாடல் மிக கச்சிதமாக உருவாக்கப்பட்ட அப்ரைட் எஸ்.யு.வி. ஆகும். இது 2-பாக்ஸ் டிசைனை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

Kia-EV9

Kia-EV9

இந்த எலெக்ட்ரிக் காரை தழுவி பல்வேறு மாடல்கள் உருவாக்கப்பட இருக்கின்றன. இந்த காரில் 3-ரோ கேபின் உள்ளது. ஒவ்வொரு வேரியண்டிற்கு ஏற்ப, இந்த கார் பல்வேறு இருக்கை அமைப்புகளில் கிடைக்கும் என்று தெரிகிறது. பி.எம்.டபிள்யூ., ஆடி மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனங்களின் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல்களுக்கு இந்த கார் தக்க பதிலடி கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

சர்வதேச சந்தையில் கியா EV9 மாடல் RWD வெர்ஷன் 76.1 கிலோவாட் ஹவர் பேட்டரி கொண்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து மற்றொரு வேரியண்ட் EV9 RWD வெர்ஷன் 99.8 கிலோவாட் ஹவர் பேட்டரி கொண்டிருக்கிறது. இந்த இரு வேரியண்ட்களின் ரேன்ஜ் மற்றும் இதர விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *