Low-Budget-bikes-featured-img
இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலும் மழை காலம் துவங்கி விட்டது. மீதமுள்ள பகுதிகளிலும் விரைவில் மழை காலம் துவங்க இருக்கிறது. மோட்டார்சைக்கிள் மாடல்களில் டூயல் சேனல் ஏ.பி.எஸ். அம்சம் மழை காலங்களில் தருவதை போன்று வேறு சமயங்களில் அதிக பாதுகாப்பை வழங்கிவிட முடியாது என்றே கூறலாம். மழை மற்றும் வெயில் என அனைத்து காலங்களிலும் பைக்குகளில் உள்ள ஏ.பி.எஸ். அம்சம் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது.
பைக்குகளில் உள்ள சிங்கில் சேனல் ஏ.பி.எஸ். அம்சம் முன்புற வீலை மட்டும் கட்டுப்படுத்தும். இதனால் பின்புற பிரேக்கை சரியாக பயன்படுத்தினால் மட்டுமே பாதுகாப்பாக வாகனத்தை நிறுத்த முடியும். பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர் எனில், இந்திய சந்தையில் டூயல் சேனல் ஏ.பி.எஸ். கொண்ட ஐந்து குறைந்த விலை மோட்டார்சைக்கிள் மாடல்களின் பட்டியலை பார்ப்போம்.
பஜாஜ் பல்சர் N160 | விலை ரூ. 1 லட்சத்து 30 ஆயிரத்து 560 :
Bajaj-Pulsar-N160
இந்த பட்டியலில் குறைந்த விலை மோட்டார்சைக்கிள் பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் N160 ஆகும். டூயல் சேனல் ஏ.பி.எஸ். அம்சம் கொண்ட குறைந்த விலை மோட்டார்சைக்கிள் மாடல்களில் ஒன்றாக பஜாஜ் பல்சர் N160 இருக்கிறது. இந்த பைக்கின் பிளாக் மற்றும் புளூ நிற வேரியன்டில் மட்டுமே டூயல் சேனல் ஏ.பி.எஸ். வசதி வழங்கப்படுகிறது.
பஜாஜ் பல்சர் NS160 | விலை ரூ. 1 லட்சத்து 36 ஆயிரத்து 736 :
Bajaj-Pulsar-NS160
டூயல் சேனல் ஏ.பி.எஸ். கொண்ட குறைந்த விலை மாடல்களில் மற்றொரு மாடலும் பஜாஜ் நிறுவனமே வழங்கி வருகிறது. பஜாஜ் பல்சர் NS160 மாடலில் பெரிமீட்டர் ஃபிரேம், அப்சைடு டவுன் ஃபோர்க்குகள், க்ளிப் ஆன் ஹேன்டில்பார்கள், அசத்தலான ஸ்டைலிங் கொண்டுள்ளது. இந்த மாடலின் நான்கு நிற வேரியண்ட்களிலும் டூயல் சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்பட்டு உள்ளது.
டி.வி.எஸ். அபாச்சி RTR 200 4V | விலை ரூ. 1 லட்சத்து 46 ஆயிரத்து 720:
TVS-Apache-RTR-200-4V
இந்த பட்டியலில் கிடைக்கும் ஒற்றை டி.வி.எஸ். நிறுவன மாடலாக அபாச்சி RTR 200 4V உள்ளது. இந்த மாடலில் டூயல் சேனல் ஏ.பி.எஸ். தவிர மூன்று ரைடிங் மோட்கள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்டேஷன், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, கிராஷ் அலர்ட் அம்சம், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய லீவர்கள், அடஜ்ஸட் செய்யக்கூடிய சஸ்பென்ஷன் கொண்டிருக்கிறது.
பஜாஜ் பல்சர் NS200 | விலை ரூ. 1 லட்சத்து 49 ஆயிரத்து 363 :
Bajaj-Pulsar-NS200
பஜாஜ் பல்சர் NS200 மாடலில் சக்திவாய்ந்த 200சிசி லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பட்டியலில் லிக்விட் கூலிங் மோட்டார் கொண்ட ஒற்றை மாடல் இது ஆகும். இதில் உள்ள என்ஜின் 24.5 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த மாடலின் அனைத்து நிற வேரியண்ட்களிலும் டூயல் சேனல் ஏ.பி.எஸ். அம்சம் உள்ளது.
பஜாஜ் பல்சர் N250 | விலை ரூ. 1 லட்சத்து 49 ஆயிரத்து 978 :
Bajaj-Pulsar-N250
குறைந்த விலையில் டூயல் சேனல் ஏ.பி.எஸ். அம்சம் கொண்ட பைக்குகளின் பட்டியலில், கடைசி மாடல் பஜாஜ் பல்சர் N250 ஆகும். இந்த மாடலின் டூயல் சேனல் ஏ.பி.எஸ். அம்சம் பிளாக் நிற வேரியண்டில் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் சிங்கில் சேனல் ஏ.பி.எஸ். அம்சம் அதிக நிற வேரியன்ட்களில் கிடைக்கிறது.
ஃபேஸ்புக்கின் மெட்டாவுக்குச் சொந்தமான இன்ஸ்டாகிராம் நிறுவனம், Restyle என்ற புதிய அப்டேட்டைக் கொண்டுவர இருக்கிறது. இதுல என்னலாம் பண்ணலாம்? Instagram’s…
OpenAI நிறுவனத்தின் ஏஐ வீடியோ எடிட்டிங் செயலியான Sora விரைவில் ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. OpenAI Sora ChatGPT…
பயனாளர்களின் செல்ஃபிக்களை வைத்து அதை மீம் டெம்ப்ளேட்டாக மாற்றும் புதிய வசதியை கூகுள் போட்டோஸ் விரைவில் அப்டேட் செய்ய இருப்பதாகத்…
Meta: மெட்டா நிறுவனம் anti-scam வசதிகளையும், விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் நடத்த திட்டமிட்டு இருக்கிறது. இதன் மூலம் whatsapp, messenger மற்றும்…
ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அறிமுகமானபோதே, deep fake என்றொரு பிரச்சனையும் அதோடு கூடவே சேர்ந்து வளர்ந்தது. Deep…
பிரவுசர் உலகில் முடிசூடா மன்னனாக இருக்கும் கூகுளின் குரோமுக்குப் போட்டியாக சாட்ஜிபிடி Atlas என்கிற ஏஐ தொழில்நுட்பத்தோடு இயங்கக் கூடிய…