automobile
வெளிநாட்டில் மாஸ் காட்டிய மகேந்திராவின் எக்ஸ்யூவி 700.. உலக அளவில் நம்பர் ஒன் இடத்தை பிடிக்குமா..?
இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி நிறுவனமான மகேந்திரா பல தரமான கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப கார்களை வடிவமைத்து விற்பனை செய்து வருகின்றனர். இந்தியாவில் இனோவாவிற்கு போட்டியாக மகேந்திரா களமிறக்க வாகனம் தான் எக்ஸ்யூவி 500. சந்தையில் அதிக அளவில் வரவேற்பு பெற்று வெற்றியடைந்தது. தற்பொழுது இந்த வாகனம் நிறுத்தப்பட்டது. இதற்கு மாற்றாக அதிநவீன தொழில்நுட்பத்துடன் களம் இறக்கிய வாகனம் தான் எக்ஸ்யூவி 700.
இந்த கார் சந்தையில் அறிமுகம் படுத்தப்பட்டிலிருந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இது மகேந்திராவின் மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்பட்டது. மேலும் இந்த கார் இப்பொழுது நல்ல விற்பனையிலும் இருந்து வருகிறது. இந்தியாவில் வெற்றியை அடைந்ததை தொடர்ந்து மகேந்திரா நிறுவனம் வெளிநாடுகளில் இதன் விற்பனையை ஆரம்பித்துள்ளது. தற்போது ஆஸ்திரேலியாவில் இந்த வண்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆரம்பம் முதலே அங்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற தொடங்கியது. எக்ஸ்யூவி 700 மிகப்பெடிய வாகன பற்றாக்குறை உருவாக்கி விட்டது.
எக்ஸ்யூவி 700 சிறப்பம்சங்கள் :
இந்த காரை பொறுத்தவரையில் 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம் கொண்டுள்ளது. வண்டி முழுவதும் 12 ஸ்பீக்கர்கள் கொண்ட சவுண்ட் சிஸ்டம் அமைக்கப்பட்டுள்ளது. டூயல் ஜோன் கிளைமேட் கண்ட்ரோல்,வயர்லெஸ் சார்ஜிங்,அலெக்சா கனெக்ட்டிவிட்டி,எலக்ட்ரானிக் ஸ்டெபி ப்ரோக்ராம்,ஆறுவே பவர் டிரைவ் போன்ற அதிநவீன தொழில்நுட்பத்துடன் வருகிறது. பெரிய பணரொமிக் சன் ரூஃப் உடன் வருகிறது. பாதுகாப்பு சார்ந்த விஷயத்தில் மகேந்திரா ஒரு பொழுதும் குறை வைத்ததில்லை.
அதே போல் ஏழு ஏர் பேக்குகள் கொண்டு வருகிறது. இந்த வண்டி உறுதியாக கட்டமைக்கப்பட்டுள்ளது. இதனால் 5 ஸ்டார் ரேட்டிங் உடன் வருகிறது. மேலும் ஏபிஎஸ்,இபி டி போன்ற சிறப்பம்சங்களுடன் வருகிறது.
எக்ஸ்யூவி 700 என்ஜின் :
2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் இது 200 பி எஸ் என்ற அதிக பவரையும் 380 nm டார்க்கியும் வழங்குகிறது. மற்றும் 2.2 லிட்டர் டீசல் இன்ஜினுடன் வருகிறது இது 185 பிஎஸ் பவரையும் 450nm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இதைத் தவிர 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் வருகிறது. இது ஐந்து மற்றும் ஏழு இருக்கைகளுடன் கிடைக்கப்பெறுகிறது.
எக்ஸ்யூவி 700 விலை :
ஆஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த எக்ஸ்யூவி 700 விலை 1.5 லட்சம் முதல் தொடங்கி 20.72 லட்சம் வரை எக்ஸ்சோரும் விலையில் விற்கப்படுகிறது.