automobile
வருகிறது மஹிந்திராவின் புதிய எக்ஸ்யூவி 200..! கிரெட்டாவிற்க்கு இது பீதியை கிளப்பமா..?
இந்தியாவின் உள்நாட்டின் உற்பத்தி நிறுவனமான மகேந்திரா பல வெற்றிகரமான கார்களை உருவாக்கி விற்பனை செய்து வருகிறது. அந்த வரிசையில் மகேந்திரா நிறுவனம் பல மின்சார கார்களை வரும் காலத்தில் களமிறக்க தயாராகி வருகின்றன. தற்போது மகேந்திராவில் எக்ஸ்யூவி 300 தவிர மற்ற அனைத்தும் ஏழு மட்டும் எட்டு இருக்கைகள் கொண்ட கார்களாக உள்ளன. ஐந்து இருக்கை கொண்ட எஸ்யூவி கார்கள் மகேந்திராவிடம் தற்போது இல்லை. இந்த இடத்தை பூர்த்தி செய்வதற்காக மகேந்திரா தற்போது xuv200 வாகனத்தை சோதனை செய்து வருகிறது.
அதிநவீன தொழில்நுட்பத்துடனும் மேலும் சில புதிய சிறப்பம்சங்களுடனும் அதிக சக்தி வாய்ந்த இஞ்சியுடன் இந்த கார் வர உள்ளது. இது தற்போது விற்பனையில் கொடி கட்டி பறக்கும் ஹுண்டாயின் கிரெட்டாவின் விற்பனையை பாதிக்குமா..? என பொறுத்திருந்து பார்ப்போம்.
இதன் வெளிப்புறத் தோற்றம் பார்த்தவுடனே இதை வாங்க தோன்றும் அளவிற்கு இதன் உருவம் அமைப்பு உள்ளது. கம்பீரமான முன்பக்க கிரில் அமைப்பு மற்றும் அழகிய முகப்பு விளக்கு ஆகியவை கண்களை கவரும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வெளிப்புற தோற்றம் சந்தையில் மிகப்பெரிய வரவேற்பை பெரும் என்பதில் சந்தேகம் இல்லை.
எஞ்சின் :
இது இரண்டு வகையான எஞ்சின் அமைப்பில் கிடைக்கிறது. ஒன்று 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் இதிலிருந்து 110 பி.ஹெச்.பி பவரும் 200nm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இரண்டாவது 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் இதிலிருந்து 115 பி.ஹெச்.பி பவரையும் 300 nm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இதனுடன் 6- ஸ்பீட் கொண்ட மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்படுகிறது.
சிறப்பம்சங்கள் :
புதிதாக வரவுள்ள எக்ஸ் யூ வி 200 உள்கட்டமைப்பு பெரிய டச் ஸ்கிரீன் இதில் ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் மென்பொருள் பயன்படுத்தும் வசதியை கொண்டுள்ளது. கூடுதல் வகைகளோடு எளிதாக பயன்படுத்த கூடிய ஸ்டேரிங் மேலும் அதிநவீன தொழில்நுட்பத்துடனும் வருகிறது.
பாதுகாப்பு அம்சங்கள் :
மகேந்திரா எப்பொழுதும் பாதுகாப்பு விஷயத்தில் குறை வைத்ததே இல்லை. அதே போல புதிதாக வரவுள்ள எக்ஸ்யூவி 200 ஆறு ஏர் பேக்குகள்,ஏபிஎஸ் பிரேக்,இபிடி பிரேக்கிங் சிஸ்டம்,பின்புற கேமரா,ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் உடன் வருகிறது.
விலை :
இது சுமார் 5 முதல் 8 லட்சம் வரை எக்ஸ்சோரும் விலையில் கிடைக்கப்பெறுகிறது. மேலும் பல வண்ணங்களில் கிடைக்கப்பெறுகிறது. இதன் நேரடி போட்டியாளராக மாருதியின் பிரசா மற்றும் ஹுண்டாயின் கிரெட்டா வாக இருக்கிறது.