automobile
2 டிரையம்ப் மாடல்கள்.. வித்தாயசமே இந்த மேட்டர்-ல தான் இருக்கு.. எதை வாங்க போறீங்க?
டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் ஸ்பீடு 400 மற்றும் ஸ்கிராம்ப்லர் 400X என இரு மோட்டார்சைக்கிள் மாடல்களை சில தினங்களுக்கு முன்பு தான் அறிவிதது. விலை தவிர இரு மாடல்களின் அம்சங்களும் முழுமையாக அறிவிக்கப்பட்டு விட்டது. ஜூலை மாதம் இந்தியாவில் வெளியாக இருக்கும் டிரையம்ப் நிறுவனத்தின் இரண்டு புதிய மாடல்களுக்கும் இடையே என்ன வித்தியாசமாக இருக்கிறது என்ற கேள்வி இணையம் முழுக்க பரவலாக எழுந்துள்ளது.
இந்திய சந்தையில் ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு மாற்றாக புதிய மோட்டார்சைக்கிள் எதிர்பார்த்து ஆவலோடு காத்திருந்தவர்களின் எதிர்பார்ப்புக்கு கிட்டத்தட்ட பதில் கிடைத்துவிட்டது. விலை மட்டும் அறிவிக்கப்படாத நிலையில், இரு மாடல்களின் செயல்திறன் எப்படி இருக்கும்? இவை சந்தையில் எத்தகைய வரவேற்பை பெறும் என்ற எதிர்பார்ப்பு வாடிக்கையாளர்கள், மட்டுமின்றி டிரையம்ப் நிறுவனத்தையும் விட்டுவைக்கவில்லை என்றே கூறலாம்.
அந்த வகையில், டிரையம்ப் ஸ்பீடு 400 மற்றும் ஸ்கிராம்ப்லர் 400X மாடல்கள் இடையே என்ன வித்தியாசமாக உள்ளது என்ற விவரங்களை சற்று விரிவாக பார்ப்போம்.
ஸ்டைலிங் :
புதிய டிரையம்ப் பைக் மாடல்களிலும் ஒரே சேசிஸ் மற்றும் என்ஜின் தான் வழங்கப்பட்டு இருக்கிறது. எனினும், இவை வெவ்வேறு பயன்பாடுகளை பூர்த்தி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக ஸ்பீடு 400 மாடலின் ஸ்டைலிங் நகர்ப்புறத்துக்கு ஏற்ற வகையில் காட்சியளிக்கிறது. அதிக ரக்கட் அம்சங்கள் இன்றி இந்த மாடலின் டிசைன் ஒட்டுமொத்தமாகவே அழகாக காட்சியளிக்கிறது.
ஸ்கிராம்ப்லர் 400X மாடலில் ஹேண்ட்கார்டு, நீண்ட முன்புற மட்கார்டு, இரட்டை பயன்பாடுகளுக்கு ஏற்ற டயர்கள், ஸ்ப்லிட் சீட்கள் வழங்கப்பட்டு உள்ளன.
வீல்கள் :
டிரையம்ப் ஸ்பீடு 400 மாடலில் 17 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டு உள்ளன. ஸ்கிராம்ப்லர் 400X மாடலில் 19 இன்ச் முன்புற வீல், பின்புறம் ஸ்பீடு 400 மாடலில் உள்ளதை போன்றே 17 இன்ச் வீல் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களிலும் வித்தியாசமான டயர்களே வழங்கப்பட்டு இருக்கின்றன. ஸ்பீடு 400 மாடலில் மெட்செலர் ஸ்போர்டெக் M9 RR ரக டயர்களும், ஸ்கிராம்ப்லர் 400X மாடலில் மெட்செலர் கரூ ஸ்டிரீட் ரக டயர்களும் வழங்கப்பட்டு இருக்கிறது.
பிரேக்கிங் :
டிரையம்ப் ஸ்பீடு 400 மாடலில் 300mm ஃபிக்சட் டிஸ்க், நான்கு பிஸ்டன்கள் கொண்ட கேலிப்பர், பின்புறம் 230mm ஃபிக்சட் டிஸ்க் மற்றும் ஃபுலோடிங் கேலிப்பர்கள் வழங்கப்பட்டு உள்ளன. ஸ்கிராம்ப்லர் 400X மாடலின் முன்புறம் 320mm டிஸ்க், பின்புறம் ஸ்பீடு 400 மாடலில் உள்ளதை போன்றே 230mm டிஸ்க் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களிலும் டூயல் சேனல் ஏபிஎஸ் ஸ்டான்டர்டு அம்சமாக வழங்கப்பட்டு உள்ளது.
அம்சங்கள் :
இரு மாடல்களும் வெவ்வேறு பயன்களை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டு இருப்பதால், இவற்றில் வித்தியாசமான அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஸ்கிராம்ப்லர் 400X மாடலில் ரேடியேட்டர், சம்ப் கார்டுகள், ஹேன்ட் கார்டுகள் உள்ளன. ஸ்பீடு 400 மாடலில் இந்த அம்சங்கள் வழங்கப்படவில்லை.
அளவீடுகள் :
டிரையம்ப் ஸ்பீடு 400 மாடலின் வீல்பேஸ் 1377mm ஆகவும், ஸ்கிராம்ப்லர் 400X மாடலில் 1418mm ஆகவும் வழங்கப்பட்டு இருககிறது. இதே போன்று சீட் உயரம் ஸ்பீடு 400 மாடலில் 790mm ஆகவும், ஸ்கிராம்ப்லர் 400X மாடலில் 835mm ஆகவும் உள்ளது. ஸ்கிராம்ப்லர் 400X மாடல் ஸ்பீடு 400-ஐ விட 9 கிலோ வரை அதிகம் ஆகும்.