Connect with us

automobile

35kmpl மைலேஜ் உடன் மாருதியின் இரு கார்கள் அறிமுகம்..! இது சந்தையில் மற்ற கார்களுக்கு பீதியை கிளப்புமா..?

Published

on

maruthi cars

புதிதாக கார் வாங்க ஆசைப்படுபவர்களுக்கு ஒரு நல்ல செய்தி மாருதி சுசுகி இடமிருந்து வந்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய நான்கு சக்கர வாகன உற்பத்தியை நிறுவனமான மாருதி சுசுகி ஜூலை 5ஆம் தேதி தனது இரண்டு மேம்படுத்தப்பட்ட புதிய காரை அறிமுகம் செய்ய உள்ளது. டொயோட்டா மற்றும் மாருதி இடையே போடப்பட்ட வாகன பரிமாற்ற ஒப்பந்தத்தின்படி டொயோட்டா இடமிருந்து இன்னோவா ஹைட்ராக் ரீ பேட்ஜின் செய்யப்பட்டு இன்விசிட்டோ வாக சுசுகி நெக்ஸாவில் விரைவில் அறிமுகமாக உள்ளது. அதற்கு முன்னரே மறைமுகமான அதற்கான முன்பதிவு தொடங்கிவிட்டது.

இந்நிலையில் மாருதி சுசுகி மேலும் 2 மேம்படுத்தப்பட்ட கார்களை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஆண்டு முதலில் ஃப்ரான்க்ஸ் என்ற 4 மீட்டருக்கும் குறைவான மைக்ரோ எஸ்யூவியை அறிமுகம் செய்தது. அதன் பின்பு சமீபத்தில் மாருதி ஜிம்னி அறிமுகம் செய்யப்பட்டது. இது மகேந்திரா தாருக்கு கடுமையான போட்டியாளராக விளங்கும். மேலும் அடுத்ததாக வரவுள்ள இனோவா ஹாய் கிராஸ் ரி பேஜிங் செய்யப்பட்டு வரவுள்ளது. அதனை தொடர்ந்து மக்கள் அதிகம் வாங்கக்கூடிய அடுத்த தலைமுறை கார்களான மாருதி சுசுகி டிசையர் மற்றும் ஸ்விப்ட் கார்களை அறிமுகம் செய்ய உள்ளது.

மாருதி சுசுகி டிசையர் :

maruti suzuki dezire

maruti suzuki dezire

மாருதி நிறுவனம் கூடிய விரைவில் டிசையர் கார் மேம்படுத்தப்பட்ட வடிவமைப்புடனும் கூடுதலாக ஹைபிரிட் தொழில்நுட்பத்துடனும் களம் இறக்க உள்ளது. இது 2024 ஆம் ஆண்டு பிற்பகுதியில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் உட்புற தோற்றத்தில் மாருதி புதிய மேம்பாடுகளை செய்துள்ளது. புதிய சிறப்பம்சத்துடன் அதிநவீன தொழில்நுட்பத்தையும் கொண்டு வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதனால் தற்போது நிலவிவரும் எஸ்யுவி கார்களின் விற்பனையை விட இந்த டிசையரின் விற்பனை பன்மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது டிசையர் நாட்டின் அதிக விற்பனையில் உள்ள காராக உள்ளது.

மாருதி சுசுகி ஸ்விப்ட் :

மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள மாருதி சுசுகி ஸ்விப்ட். அனைவராலும் வாங்க கூடிய அறிமுக நிலை காரக விளங்குகிறது. இந்த கார்கான மேம்படுத்தப்பட்ட மாடல் வகையை நீண்ட நாட்களாக மக்கள் எதிர் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் மாருதி நிறுவனம் இந்த காருக்கான உட்புற மற்றும் வெளி தோற்றத்தை முற்றிலுமாக மாற்றியுள்ளது. இந்த மாற்றம் வெளிநாடுகளில் சோதனை செய்யும் பொழுது நன்றாக தெரிகிறது. இந்த புதிய ஸ்விப்ட் இந்த வருட இறுதியில் அல்லது அடுத்த வருட தொடக்கத்தில் அறிமுகப்படுத்தலாம் என தெரிகிறது.

maruti suzuki swift

maruti suzuki swift

இதில் புதிதாக எல்இடி முகப்பு விளக்குகள். புதுப்பிக்கப்பட்ட வடிவங்களுடன் கூடிய பம்பர்,புதிய அலாய் வடிவ சக்கரங்கள் மேலும் மேம்படுத்தப்பட்ட சிறப்பம்சங்கள் உடன் இந்த கார் வருகிறது. அதிக சௌகரியபயணத்தை வழங்குவதற்கான சிறப்பும் அம்சத்துடனும் வருகிறது. இதிலும் டொயோட்டா சுசுகி கூட்டு தயாரிப்பில் உருவான ஹைபிரிட் டெக்னாலஜி இதில் பயன்படுத்தப்படுகிறது. 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் வகைகளில் கிடைக்கிறது. ஹைபிரிட் மற்றும் பெட்ரோல் உடன் சேர்ந்து இந்த கார் சுமார் 35 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சந்தையில் மற்ற கார்களின் விற்பனையை இது பீதியை கிளப்ப போவதில் எந்த மாற்றமும் இல்லை.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *