Connect with us

automobile

1 மாதத்தில் இத்தனை யூனிட்களா..? மே 2023 இந்திய விற்பனையில் அசத்திய பலேனோ, கிரெட்டா!

Published

on

creta and baleno

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அதிகம் விற்பனையான கார் என்ற பெருமையை மாருதி சுசுகி பலேனோ மாடல் பெற்று இருக்கிறது. இந்தியாவில் அதிகம் விற்பனையான எஸ்.யு.வி. என்ற பெருமையை ஹூண்டாய் கிரெட்டா பெற்று உள்ளது. கடந்த மே மாதத்தில் மட்டும் மாருதி பலேனோ மாடல் 18 ஆயிரத்து 733 யூனிட்கள் விற்பனையாகி உள்ளன.

ஹூண்டாய் கிரெட்டா மாடல் 14 ஆயிரத்து 449 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது. பிரீமியம் ஹேச்பேக் பிரிவில் முன்னணி கார் என்ற அந்தஸ்தை மாருதி சுசுகி பலேனோ பெற்று இருக்கிறது. இந்திய சந்தையில் மாருதி சுசுகி பலேனோ மாடலின் விலை ரூ. 6 லட்சத்து 61 ஆயிரம் என்று துவங்குகிறது. இதன் டாப் எணட் மாடல் விலை ரூ. 9 லட்சத்து 88 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

மாருதி சுசுகி பலேனோ மாடல் ஹூண்டாய் i20 மற்றும் டாடா அல்ட்ரோஸ் மாடல்களுக்கு போட்டியாக உள்ளது. பலேனோ மாடலில் 1.2 லிட்டர் டூயல் ஜெட்-VVT பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 89.73 ஹெச்பி பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 5 ஸ்பீடு ஆட்டோமேடிக் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

Maruti-Baleno

Maruti-Baleno

மாருதி பலேனோ மாடலின் CNG ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. இந்த யூனிட் 77.4 ஹெச்பி பவர், 98.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷ் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்திய சந்தையின் மிட்-சைஸ் எஸ்.யு.வி. பிரிவில் ஹூண்டாய் கிரெட்டா மாடல் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதன் விலை ரூ. 10 லட்சத்து 87 ஆயிரம் என்று துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 19 லட்சத்து 20 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

ஹூண்டாய் கிரெட்டா மாடல் கியா செல்டோஸ், மாருதி சுசுகி கிரான்ட் விட்டாரா, டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடர், ஸ்கோடா குஷக் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் போன்ற மாடல்களுக்கு இந்திய சந்தையில் போட்டியாக அமைகிறது.

creta

creta

தற்போது ஹூண்டாய் கிரெட்டா மாடல் 1.5 லிட்டர் MPi பெட்ரோல், 1.5 லிட்டர் U2 CRDi டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 115 ஹெச்பி பவர், 143.8 நியூட்டன் மீட்டர் டார்க் மற்றும் 116 ஹெச்பி பவர், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

இதன் பெட்ரோல் என்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன், இன்டெலிஜன்ட் வேரியபில் டிரான்ஸ்மிஷனும், டீசல் என்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

google news