Connect with us

automobile

இப்போதைக்கு வாய்ப்பில்ல ராஜா.. மாருதி எலெக்ட்ரிக் கார் எப்போ வெளியாகுது தெரியுமா?

Published

on

Maruti-Suzuki-EVX-Featured img

மாருதி சுசுகி நிறுவனம் eVX கான்செப்ட்-ஐ தழுவி உருவாக்கப்படும் தனது முதல் எலெக்ட்ரிக் வாகனத்தை அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. அறிமுக நிகழ்விலேயே இதன் விலையும் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. எலெக்ட்ரிக் வாகனமாக உருவாக்கப்படும் eVX எஸ்யுவி மாடலை மாருதி சுசுகி மட்டுமின்றி டொயோட்டாவும் உற்பத்தி பணிகளில் இணைந்துள்ளது.

Maruti-Suzuki-EVX-1

Maruti-Suzuki-EVX-1

மாருதி சுசுகி மற்றும் டொயோட்டா நிறுவனங்கள் கூட்டணியில் உருவாகும் எலெக்ட்ரிக் வாகனம் சுசுகி நிறுவனத்தின் குஜராத் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் என்றும், இந்த ஆலையில் ஆண்டுக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் வாகனங்களை உற்பத்தி செய்ய முடியும் என்றும் கூறப்படுகிறது. இரு எஸ்யுவிக்களும் இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்படும் நிலையில், இவை இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளன.

Maruti-Suzuki-EVX-2

Maruti-Suzuki-EVX-2

சர்வதேச மாடல் என்ற போதிலும், இந்த எஸ்யுவி முதற்கட்டமாக இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது. டொயோட்டாவின் 40PL எலெக்ட்ரிக் ஸ்கேட்போர்டு ஆர்கிடெக்ச்சரில் உருவாக்கப்பட்ட பிளாட்ஃபார்மில் தான் மாருதி eVX மாடல் உருவாக்கப்படுகிறது. இந்த கார் 27PL எனும் குறியீட்டு பெயரில் உருவாக்கப்படுகிறது. மேலும் இந்த கார் உற்பத்தியில் பெருமளவு உள்நாட்டு பாகங்களே பயன்படுத்தப்படுகின்றன.

அளவீடுகள் :

சமீபத்தில் தான் இந்த காரின் ப்ரோடக்‌ஷன் வெர்ஷன் போலாந்து அருகில் டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின. அதன்படி இந்த எலெக்ட்ரிக் கார் 4.3 மீட்டர் நீளமாகவும், ஒட்டுமொத்த தோற்றம் சதுரங்க வடிவில் காட்சியளிக்கும் என்றும் தெரியவந்துள்ளது. இந்த மாடல் 2025 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

Maruti-Suzuki-EVX-3

Maruti-Suzuki-EVX-3

பார்ன்-எலெக்ட்ரிக் ஸ்கேட்போர்டு பிளாட்பார்மில் உருவாகி இருப்பதால், இந்த எலெக்ட்ரிக் எஸ்யுவி-யின் வீல்பேஸ் 2700 மில்லிமீட்டர்களில் இருக்கும் என்று தெரிகிறது. இந்த காரில் பிளஷ் இன்டீரியர் மற்றும் அதிக சவுகரியமான அம்சங்கள், பாதுகாப்பு வசதிகள் மற்றும் தொழில்நுட்பம் வழங்கப்படும் என்று தெரிகிறது.

ரேன்ஜ் விவரங்கள் :

பவர்டிரெயினை பொருத்தவரை 2023 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட்ட மாடலில் 60 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்படும் என்றும், இது 550 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதன் ப்ரோடக்‌ஷன் வெர்ஷன் முழு சார்ஜ் செய்தால் 500 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என்று கூறப்படுகிறது.

Maruti-Suzuki-EVX-4

Maruti-Suzuki-EVX-4

இதே காரின் என்ட்ரி லெவல் மாடலில் 48 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்படும் என்றும், இது முழு சார்ஜ் செய்தால் 400 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என்று தெரிகிறது. இந்திய சந்தையில் புதிய மாருதி சுசுகி eVX மாடல் 2025 ஆண்டு அறிமுகமாகும் என்று தெரிகிறது. அப்போதைக்கு இந்த மாடல் ஹூண்டாய் உருவாக்கி வருவதாக கூறப்படும் கிரெட்டா EV மாடலுக்கு போட்டியாக அமையும் என்று தெரிகிறது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *