மாருதி சுசுகி நிறுவனம் தனது EVX எலெக்ட்ரிக் எஸ்யுவி-யின் கான்செப்ட் வெர்ஷனை 2023 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் காட்சிக்கு வைத்து இருந்தது. இந்த மாடல் தான் மாருதி சுசுகி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் வாகனமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி மாருதி சுசுகி EVX எஸ்யுவி மாடல் 2025 வாக்கில் அறிமுகமாகும் என்று தெரிகிறது. 2030 ஆம் ஆண்டிற்குள் ஆறு எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய மாருதி சுசுகி நிறுவனம் இலக்கு நிர்ணயம் செய்து இருக்கிறது. இந்த ஆறு மாடல்களில் ஒன்றாகவும், மாருதியின் முதல் எலெக்ட்ரிக் வாகனமாகவும் புதிய EVX மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் அனைவரின் கவனத்தை ஈர்த்த மாடல்களில் ஒன்றாக மாருதி சுசுகி EVX இருந்தது. இந்த நிலையில், மாருதி சுசுகி EVX மாடல் சாலைகளில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
இவை போலாந்து நாட்டில் டெஸ்டிங்கின் போது எடுக்கப்பட்டவை ஆகும். ஸ்பை படங்களின் படி புதிய எலெக்ட்ரிக் காரின் மிக்முக்கிய அம்சங்களாக, டூயல்-பாட் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், ஸ்வெப்ட்பேக் டிசைன் உள்ளிட்டவை இருக்கிறது. இத்துடன் புதிய மாருதி சுசுகி எலெக்ட்ரிக் காரில் அளவில் பெரிய க்ரோம் ஸ்லாட், அப்ரைட் முன்புறம் மற்றும் கிரில் மற்றும் ஏர்-டேம் இடையில் நம்பர் பிளேட் ஹோல்டர் இடம்பெற்று இருக்கிறது.
இவற்றுடன் சில்வர் நிற மல்டி-ஸ்போக் அலாய் வீல்கள், முன்புற கதவில் ORVM-கள், ஷார்க்-ஃபின் ஆன்டெனா, இன்டகிரேட் செய்யப்பட்ட ஸ்பாயிலர், ரியர் பம்ப்பக். ரியர் வைப்பர் மற்றும் வாஷர், எல்இடி டெயில் லைட்கள், பூட் லிட் பகுதியில் எல்இடி லைட் பார் உள்ளது.
காரின் இன்டீரியரை பொருத்தவரை முற்றிலும் புதிய கேபின், 2 ஸ்போக் மல்டி-ஃபன்ஷன் ஸ்டீரிங் வீல், டேஷ்போர்டில் பெரிய ஸ்கிரீன் உள்ளது. இதில் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் ஃபுளோடிங் சென்டர் கன்சோல் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் கிளாஸ் பிளாக் இன்சர்ட்கள், எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் வசதி கொண்ட முன்புற இருக்கைகள், ஆட்டோ டிம்மிங் IRVM, சுழலும் வகையிலான கியர், ஏசி-யை இயக்க டச் கண்ட்ரோல் வசதி வழங்கப்படுகிறது. 2023 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட்ட மாருதி சுசுகி EVX மாடல் 60 கிலோவாட் ஹவர் பேட்டரி கொண்டிருந்தது.
புதிய மாருதி சுசுகி EVX மாடலை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 550 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் பெற முடியும். இதன் கான்செப்ட் மாடல் 4300mm நீளம், 1800mm அகலம், 1600mm உயரமாக உள்ளது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…