மாருதி சுசுகி நிறுவனம் தனது நெக்சா பிராண்டிங்கில் அறிமுகம் செய்த Fronx மாடல் பலேனோ பிரீமியம் ஹேச்பேக்-ஐ தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. 2023 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்ட பலேனோ ஹேச்பேக் மாடலில் 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது. அறிமுகம் செய்வதற்கு முன் இந்த மாடலுக்கு அதிக வரவேற்பு கிடைத்து வந்தது.
பிறகு இந்திய சந்தையில் Fronx மாடலின் விலை விவரங்களை அறிவித்த பிறகு 1.2 லிட்டர் NA K12N பெட்ரோல் என்ஜின் வேரியண்ட்-க்கான வரவேற்பு அதிகரிக்க துவங்கியது. இது குறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவன மூத்த நிர்வாக அலுவலர் சஷான்க் ஸ்ரீவஸ்தவா, விலை அறிவிப்புக்கு பிறகு முன்பதிவு எப்படி மாறியது என்று தெரிவித்தார்.
“Fronx மாடலை பொருத்தவரை 55 சதவீதம் டர்போ யூனிட்களும், 45 சதவீதம் K12 யூனிட்களாக இருந்தது, ஆனால் விலை அறிவிக்கப்பட்ட பிறகு, மிகப்பெரிய மாற்றம் நடைபெற்றது. அறிமுகம் செய்யப்பட்ட பின், 15 சதவீத முன்பதிவுகள் டர்போ யூன்ட்களும், 85 சதவீத முன்பதிவுகள் NA வேரியண்ட்களுக்கும் மாறி இருக்கிறது,” என்று அவர் தெரிவித்தார்.
பலேனோ மாடலை விட வித்தியாசமான டிசைன் மற்றும் ஸ்டைலிங் கொண்டிருக்கும் மாருதி சுசுகி Fronx மாடல் இருவித பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. ஒவ்வொரு என்ஜினும் ஒற்றை வேரியண்டிலேயே கிடைக்கிறது. சற்றே குறைவான சக்திகொண்ட 1.2 லிட்டர் மாடல் சிக்மா மற்றும் டெல்டா வேரியண்ட்களில் கிடைக்கிறது.
1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மாடல் சீட்டா மற்றும் ஆல்ஃபா வேரியண்ட்களில் கிடைக்கிறது. இருவித என்ஜின்களை கொண்ட ஒற்றை வேரியண்ட் ஆக டெல்டா பிளஸ் இருக்கிறது. 1.2 லிட்டர் மற்றும் 1.0 லிட்டர் என்ஜின் கொண்ட வேரியண்ட்களின் விலை வேறுபாடு ரூ. 1 லட்சம் ஆகும்.
1.2 லிட்டர் மேனுவல் வேரியண்ட் மற்றும் 1.0 லிட்டர் டர்போ மேனுவல் வேரியண்ட் இடையேயான விலை வித்தியாசம் ரூ. 2 லட்சத்து 75 ஆயிரம் ஆகும். 1.2 லிட்டர் AMT வேரியண்ட் மற்றும் 1.0 லிட்டர் டர்போ ஆட்டமேடிக் வேரியண்ட்களிடையேயான விலை வித்தியாசம் ரூ. 3 லட்சத்து 70 ஆயிரம் ஆகும்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…