மாருதி சுசுகி நிறுவனம் தனது ஃபிளாக்ஷிப் இன்விக்டோ எம்.பி.வி. மாடலை இந்திய சந்தையில் சமீபத்தில் அறிமுகம் செய்தது. புதிய மாருதி சுசுகி இன்விக்டோ மாடலின் விலை ரூ. 24 லட்சத்து 79 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது அறிமுக விலை என்றும் மாருதி சுசுகி தெரிவித்து இருக்கிறது.
இந்திய சந்தையில் புதிய மாருதி சுசுகி இன்விக்டோ மாடல் சீட்டா பிளஸ் மற்றும் ஆல்ஃபா பிளஸ் என இரண்டு வித வேரியண்ட்களில் கிடைக்கிறது. மேலும் இருவித இருக்கை அமைப்புகளில் கிடைக்கிறது.
விலை விவரங்கள் :
மாருதி சுசுகி இன்விக்டோ சீட்டா பிளஸ் 7 சீட்டர் ரூ. 24 லட்சத்து 79 ஆயிரம்
மாருதி சுசுகி இன்விக்டோ சீட்டா பிளஸ் 8 சீட்டர் ரூ. 24 லட்சத்து 84 ஆயிரம்
மாருதி சுசுகி இன்விக்டோ ஆல்ஃபா பிளஸ் 7 சீட்டர் ரூ. 28 லட்சத்து 42 ஆயிரம்
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா ஹைகிராஸ் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் மாருதி சுசுகி இன்விக்டோ மாடல், டொயோட்டா நிறுவனத்தின் பிடாடி ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது.
இதே ஆலையில் தான் மாருதி சுசுகி கிரான்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா ஹைரைடர் மாடல் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மாருதி சுசுகியின் நெக்சா பிரான்டிங்கில் உருவாகி இருக்கும் எட்டாவது மாடலாக இன்விக்டோ உருவாக்கப்பட்டு இருக்கிறது.
வெளிப்புற தோற்றம் :
இன்விக்டோ மற்றும் இன்னோவா ஹைகிராஸ் மாடல்களின் ஒட்டுமொத்த டிசைன் ஒரே மாதிரியே காட்சியளிக்கிறது. இன்விக்டோ மாடலின் கிரில் ஹைகிராஸ்-இல் இருப்பதை விட வித்தியாசமாக உள்ளது. ஹெட்லைட்களை பொருத்தவரை இன்விக்டோ மாடலில் நெக்சாவின் 3-பிளாக் டேடைம் ரன்னிங் லைட்கள் உள்ளன. இத்துடன் வித்தியாசமான பம்ப்பர் மற்றும் ஃபாக்ஸ் ஸ்கிட் பிலேட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இன்விக்டா மாடலில் உள்ள 17 இன்ச் அலாய் வீல்கள் வித்தியாசமான டிசைன் கொண்டிருக்கிறது. இதுதவிர மாருதி சுசுகி, இன்விக்டோ மற்றும் ஹைப்ரிட் பேட்ஜ் உள்ளிட்டவை இரு மாடல்களிலும் ஒரே மாதரியே பொருத்தப்பட்டு உள்ளன. அளவீடுகள் இரு மாடல்களிலும் ஒரே மாதிரியே உள்ளன. இந்த மாடல் 4755mm நீளம், 1850mm அகலம், 1795mm உயரம் மற்றும் 2850mm அளவில் வீல்பேஸ் உள்ளது.
இன்டீரியர் மற்றும் அம்சங்கள் :
மாருதி சுசுகி இன்விக்டோ மாடலில் ஆல்-பிளாக் இன்டீரியர் மற்றும் ஷேம்பெயின் கோல்டு அக்சென்ட்கள் செய்யப்பட்டு உள்ளன. இவை தவிர இன்விக்டோ மற்றும் இன்னோவா ஹைகிராஸ் மாடல்களில் ஒரே மாதிரியான இன்டீரியர் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த காரும் 7 மற்றும் 8 பேர் அமரக்கூடிய இருக்கை அமைப்புகளில் கிடைக்கிறது.
இத்துடன் 10.1 இன்ச் டச் ஸ்கிரீன், வயர்லெஸ் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே கனெக்டிவிட்டி வழங்கப்படுகிறது. இதர அம்சங்களாக 360 டிகிரி கேமரா, பானரோமிக் சன்ரூஃப், ரூஃப் ஆம்பியன்ட் லைட்டிங், பவர்டு டிரைவர் சீட், பவர்டு டெயில்கேட், டூயல் ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், முன்புற இருக்கைகளில் வென்டிலேஷன் வசதி, 7 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 50-க்கும் அதிக சுசுகி கனெக்ட் அம்சங்கள் வழங்கப்படுகின்றன.
பவர்டிரெயின் விவரங்கள் :
புதிய மாருதி சுசுகி இன்விக்டோ மாடலில் 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட என்ஜினுடன் ஸ்டிராங் ஹைப்ரிட் பவர்டிரெயின் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் எலெக்ட்ரிக் மோட்டார் உள்ளது. இவை இணைந்து 184 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் e-CVT டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இதன் மூலம் புதிய இன்விக்டோ, மாருதி சுசுகியின் முதல் ஹைப்ரிட் மற்றும் ஆட்டோமேடிக் வசதி மட்டும் கொண்ட மாடலாக இருக்கிறது. இந்த கார் லிட்டருக்கு 23.24 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…