Categories: automobilelatest news

மே 2023 – இந்திய சந்தையில் அதிகம் விற்பனையான ஸ்கூட்டர்கள் – டாப் 5 பட்டியல்!

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் இருசக்கர வாகனங்கள் விற்பனை கணிசமான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. கடந்த மே மாத விற்பனையில் இந்திய சந்தையில் ஸ்கூட்டர் பிரிவு மட்டும் 39.44 சதவீதம் வளர்ச்சி பெற்று இருக்கிறது. மே 2023 மாதத்தில் மட்டும் இந்திய சந்தையில் 4 லட்சத்து 33 ஆயிரத்து 229 ஸ்கூட்டர்கள் விற்பனையாகி உள்ளன. இது கடந்த ஆண்டு மே மாதம் விற்பனையான 3 லட்சத்து 10 ஆயிரத்து 686 யூனிட்களை விட அதிகம் ஆகும்.

எனினும், கடந்த ஏப்ரல் மாதத்தில் விற்பனையான 4 லட்சத்து 36 ஆயிரத்து 051 யூனிட்களை விட குறைவு ஆகும். மே 2023 மாத ஸ்கூட்டர் விற்பனையில் ஹோண்டா ஆக்டிவா, டிவிஎஸ் ஜூப்பிட்டர் மற்றும் சுசுகி அக்சஸ் மாடல்கள் முதல் மூன்று இடங்களை பிடித்தன. மேலும் ஒட்டுமொத்தமாக ஸ்கூட்டர் விற்பனையில் 70.87 சதவீதம் பங்குகளை சந்தையில் வைத்திருக்கின்றன.

டிவிஎஸ் ஜூப்பிட்டர் மற்றும் சுசுகி பர்க்மேன் தவிர அனைத்து மாடல்களும் விற்பனையில் வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஒலா எலெக்ட்ரிக், டிவிஎஸ் ஐகியூப் மற்றும் ஏத்தர் 450X போன்ற மாடல்கள் வருடாந்திர அடிப்படையில் மும்மடங்கு வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.

இந்திய ஸ்கூட்டர் சந்தையில் மே 2023 மாதம் அதிகம் விற்பனையான டாப் 5 ஸ்கூட்டர்கள் எவை என்று தொடர்ந்து பார்ப்போம்.

டிவிஎஸ் என்டார்க் :

TVS-Ntorq

அதிகம் விற்பனையான ஸ்கூட்டர்கள் பட்டியலில் டிவிஎஸ் நிறுவனத்தின் என்டார்க் மாடல் ஐந்தாவது இடம் பிடித்துள்ளது. இந்த மாடல் மே 2023 மாதத்தில் 27 ஆயிரத்து 556 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இது கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடும் போது 1,551 யூனிட்கள் அதிகம் ஆகும். இந்த மாடல் சந்தையில் 6.36 பங்குகளை பெற்றுள்ளது.

ஒலா :

Ola-electric-scooter

ஒலா எலெக்ட்ரிக் நிறுவன ஸ்கூட்டர்கள் இந்த பட்டியலில் நான்காவது இடம் பிடித்துள்ளது. கடந்த மாதம், இந்த மாடல் 28 ஆயிரத்து 469 யூனிட்கள் விற்பனையாகி உள்ளன. இவை கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடும் போது 19 ஆயிரத்து 200 யூனிட்கள் அதிகம் ஆகும். இதன் மூலம் ஒலா நிறுவனம் ஸ்கூட்டர் விற்பனையில் 207.14 சதவீதம் வருடாந்திர வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

சுசுகி அக்சஸ் :

Suzuki-Access

மே 2023 மாதத்தில் மட்டும் 45 ஆயிரத்து 945 யூனிட்கள் விற்பனையாகி சந்தையில் மூன்றாவது இடம்பிடித்துள்ளது சுசுகி அக்சஸ் மாடல். இந்த மாடல் கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடும் போது 10 ஆயிரத்து 236 யூனிட்கள் அதிகமாக விற்பனை செய்துள்ளது. இந்திய ஸ்கூட்டர்கள் சந்தையில் சுசுகி அக்சஸ் மாடல் 10.61 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது.

டிவிஎஸ் ஜூப்பிட்டர் :

TVS-Jupiter

இந்திய ஸ்கூட்டர் மாடல்கள் விற்பனையில் -3.21 சதவீதம் வருடாந்திர அடிப்படையில் சரவை சந்தித்து இருக்கும் போதிலும், டிவிஎஸ் ஜூப்பிட்டர் மாடல் இந்த பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்துள்ளது. கடந்த மே மாதத்தில் மட்டும் டிவிஎஸ் ஜூப்பிட்டர் மாடல் 57 ஆயிரத்து 698 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டது. இது கடந்த ஆண்டு மே மாத விற்பனையை விட 1915 யூனிட்கள் குறைவு ஆகும்.

ஹோண்டா ஆக்டிவா :

Honda-Activa

இந்திய இருசக்கர வாகனங்கள் சந்தையில் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாகவும், ஸ்கூட்டர்கள் பிரிவில் முதலிடமும் பிடித்து ஹோண்டா ஆக்டிவா மாடல் அசத்தி வருகிறது. 2023 மே மாதத்தில் மட்டும் 2 லட்சத்து 03 ஆயிரத்து 365 யூனிட்கள் விற்பனையான நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் 1 லட்சத்து 49 ஆயிரத்து 407 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இதன் மூலம் ஹோண்டா ஆக்டிவா மாடல் 36.11 சதவீதம் வருடாந்திர வளர்ச்சியை பதிவு செய்து உள்ளது.

admin

Recent Posts

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.. பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டம்.. பதிவு செய்வது எப்படி?

பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் முதற்கட்ட செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் 2024-25 காலக்கட்டத்தில் 1.25 லட்சம் பேருக்கு இன்டர்ன்ஷிப்…

1 hour ago

ஆன்லைனில் பாஸ்போர்ட் சேவைகளை இயக்குவதில் புது சிக்கல்.. காரணம் இதுதான்

இந்தியாவில் இருந்து வெளநாடுகளுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுக்க…

2 hours ago

WT20 உலகக் கோப்பை: Dead Ball பஞ்சாயத்து.. ICC ரூல்ஸ் என்ன சொல்லுது தெரியுமா?

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துவக்கம் முதலே பரபர சம்பவங்களை காணத் துவங்கியது. இந்தத் தொடரில் இந்திய…

3 hours ago

WT20 உலகக் கோப்பை: முதல் ஓவரிலேயே முகத்தில் காயம்.. வந்த வேகத்தில் வெளியேறிய வீராங்கனை

மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின்.…

4 hours ago

INDvsBAN முதல் டி20-க்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்.. தயார் நிலையில் 2500 காவலர்கள்

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து டி20 தொடரில் விளையாடுகிறது.…

4 hours ago

WT20 உலகக் கோப்பை: அவுட் ஆன நியூஸி. வீரர், அந்தர் பல்டி அடித்த அம்பயர்.. கடுப்பான இந்திய கேப்டன்

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத்…

5 hours ago