automobile
மே 2023 மிட்-சைஸ் எஸ்யுவி பிரிவில் அசத்திய ஸ்கார்பியோ மற்றும் XUV700
மே 2023 ஆட்டோமொபைல் சந்தையின் மிட்-சைஸ் எஸ்யுவி பிரிவில் மஹிந்திரா ஸ்கார்பியோ N மற்றும் XUV700 மாடல்கள் ஆதிக்கம் செலுத்தின. இரு மாடல்கள் இணைந்து சந்தையில் 52.48 சதவீத பங்குகளை பிடித்துள்ளன. சப்-4 மீட்டர் மற்றும் காம்பேக்ட் எஸ்யுவி பிரிவுகளை போன்றே மிட்-சைஸ் எஸ்யுவி மாடல்களும் வருடாந்திர அடிப்படையில் விற்பனை வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.
இந்திய சந்தையில் மிட்-சைஸ் எஸ்யுவி மாடல்கள் மே 2023 மாதத்திற்கான விற்பனையில் 45.73 சதவீதம் வருாடந்திர வளர்ச்சியை பதிவு செய்து இருக்கின்றன. மே மாதத்தில் மட்டும் மொத்தமாக 27 ஆயிரத்து 747 மிட்-சைஸ் எஸ்யுவி மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. கடந்த ஆண்டு மே மாதம் 19 ஆயிரத்து 040 யூனிட்களே இந்த பிரிவில் விற்பனை செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
வருடாந்திர அடிப்படையில் வளர்ச்சி பெற்றுள்ளதை போன்றே மாதாந்திர அடிப்படையிலும், 10.18 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. ஏப்ரல் 2023 மாதத்தில் 25 ஆயிரத்து 183 யூனிட்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தது. இது கடந்த மாதத்தை விட 2 ஆயிரத்து 564 யூனிட்கள் குறைவு ஆகும். மிட்-சைஸ் எஸ்யுவி மாடல்கள் விற்பனையில் மஹிந்திரா ஸ்கார்பியோ N மற்றும் XUV700 மாடல்கள் அதிக விற்பனையை பதிவு செய்துள்ளன.
மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடலின் விற்பனை வருடாந்திர அடிப்படையில் 114.31 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் 4 ஆயிரத்து 348 யூனிட்கள் விற்பனையாகி இருந்த நிலையில், மே 2023 மாதம் 9 ஆயிரத்து 318 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இதன் மூலம் இந்த மாடல் 33.58 சதவீதம் சந்தை பங்குகளை எட்டியுள்ளது.
இதன் மாதாந்திர விற்பனை ஏப்ரல் மாதம் 9 ஆயிரத்து 617 யூனிட்களாக இருந்தது. கடந்த மாதம் இது 3.11 சதவீதம் வரை சரிவடைந்துள்ளது. தற்போது மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடலை வாங்குவோர் 25 முதல் 30 வாரங்கள் வரை காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகி இருக்கிறது. இந்த நிலை காரின் வேரியண்டிற்கு வேறுப்படும்.
மற்றொரு மிட்-சைஸ் எஸ்யுவி-யான மஹிந்திரா XUV700 விற்பனை வருடாந்திர அடிப்படையில் 3.47 சதவீதமும், மாதாந்திர அடிப்படையில் 18.89 சதவீதமும் அதிகரித்துள்ளது. மிட்-சைஸ் எஸ்யுவி பிரிவில் மஹிந்திரா XUV700 மாடல் தற்போது 18.90 சதவீதம் பங்குகளை பெற்று இருக்கிறது. இந்த காரின் பேஸ் வேரியண்ட் காத்திருப்பு காலம் 15 வாரங்களாக அதிகரித்து இருக்கிறது.
இந்திய சந்தையில் டிசம்பர் 2022 மாதம் அறிமுகம் செய்யப்பட்ட டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் மாடல் விற்பனையில் 2 ஆயிரத்து 990 யூனிட்கள் பதிவு செய்து, சந்தையில் தற்போது 10.78 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது. இதன் மாதாந்திர வளர்ச்சி 42.72 சதவீதமாக பதிவாகி இருக்கிறது. நான்காவது இடத்தில் எம்ஜி ஹெக்டார்/பிளஸ் மாடல் உள்ளது. இந்த கார் 2 ஆயிரத்து 800 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹேரியர் மற்றும் சஃபாரி மாடல்களின் விற்பனை குறைந்துள்ளது. இரு மாடல்களின் பேஸ்லிஃப்ட் வெர்ஷன் வெளியீட்டுக்கு வாடிக்கையாளர்கள் காத்திருப்பதே, இவற்றின் விற்பனை குறைய காரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. புதிய பேஸ்லிஃப்ட் மாடல்கள் சாலையில் டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படம், வீடியோக்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.
ஹேரியர் மாடலின் விற்பனை வருடாந்திர அடிப்படையில் 17.57 சதவீதமும், மாதாந்திர அடிப்படையில் 17.25 சதவீதமும் சரிவடைந்துள்ளன. கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்த கார் மொத்தத்தில் 2 ஆயிரத்து 783 மற்றும் 2 ஆயிரத்து 794 யூனிட்களே விற்பனையாகி உள்ளன. சஃபாரி மாடல் விற்பனை வருடாந்திர அடிப்படையில் 20.79 சதவீதமும், மாதாந்திர அடிப்படையில் 12.47 சதவீதமும் சரிவடைந்துள்ளது.