மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது இரண்டாவது தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் GLC மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த காரின் டெஸ்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஜூலை மாதம் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் GLC மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், முற்றிலும் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் GLC மாடலுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது.
புதிய கார் முன்பதிவு பற்றி மெர்சிடிஸ் பென்ஸ் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், பென்ஸ் விற்பனையாளர்கள் அதிகாரப்பூர்வமற்ற முறையில் புதிய பென்ஸ் GLC மாடலுக்கான முன்பதிவை துவங்கி உள்ளனர். முதல் தலைமுறை GLC மாடல் இந்தியா மட்டுமின்றி உலக சந்தையிலும் அமோக வெற்றி பெற்ற மாடல் ஆகும். இது பென்ஸ் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்று ஆகும்.
இந்திய சந்தையில் முற்றிலும் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் மாடல் டெஸ்டிங் செய்யப்படும் போது எடுக்கப்பட்ட படங்களை அந்நிறுவனம் வெளியிட்டது. இந்த புகைப்படங்களில் இருந்த மாடல் AMG லைன் வேரியண்ட் இல்லை. இதன் கிரில் க்ரோம் ஃபினிஷ் செய்யப்பட்ட ஸ்டார் மற்றும் பெரிய அலாய் வீல்களை கொண்டிருக்கவில்லை. இந்த மாடலில் செங்குத்தான ஸ்லாட்கள், 18-இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டு இருந்தன.
என்ஜின் விவரங்கள்:
புதிய மெர்சிடிஸ் பென்ஸ் GLC மாடல் GLC 300 அல்லது GLC 43 AMG வெர்ஷன்களில் விற்பனை செய்யப்படும் என்று தெரிகிறது. சர்வதேச சந்தையில், புதிய GLC மாடலில் இரண்டு, 4-சிலிண்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள், பிளக்-இன் ஹைப்ரிட் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த கார் 120 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ், 4மேடிக் 4-வீல் டிரைவ் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் புதிய GLC 200 மாடலை 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடனும் GLC 220d மாடலை 2.0 லிட்டர் டீசல் என்ஜினுடனும் அறிமுகம் செய்யும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இரு வேரியண்ட்களுடன் 48 வோல்ட் இன்டகிரேட் செய்யப்பட்ட மோட்டார் வழங்கப்படுகிறது.
எதிர்பார்க்கப்படும் விலை விவரங்கள் :
மெர்சிடிஸ் பென்ஸ் GLC மாடலின் விலை தற்போது ரூ. 72 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என்று துவங்குகிறது. புதிய மாடலில் மேம்பட்ட தோற்றம் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் வழங்கப்படும் என்பதால், இரண்டாம் தலைமுறை GLC மாடலின் விலை சற்று அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது. இதன் விலை கிட்டத்தட்ட ரூ. 75 லட்சம், எக்ஸ்-ஷோரூம் முதல் துவங்கும் என்று தெரிகிறது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…