பி.எம்.டபிள்யூ. நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஃபிளாக்ஷிப் எலெக்ட்ரிக் செடான் மாடல், i7 சீரிசை விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி இந்த காரின் புதிய M70 வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த கார் பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் அதிக சக்திவாய்ந்த எலெக்ட்ரிக் மாடல் ஆகும்.
M மாடல் என்ற அடிப்படையில், M70 காரில் ஏராளமான M சார்ந்த அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இவை இந்த காரை தனித்துவம் மிக்க ஒன்றாக மாற்றி இருக்கிறது. அதன்படி M முன்புற மற்றும் பின்புற பம்ப்பர்கள், M சைடு ஸ்கர்ட்கள், M மிரர்கள், 21 இன்ச் M அலாய் மற்றும் புளூ பிரேக் கேலிப்பர்கள், M பேட்ஜ் கொண்ட பிளாக் முன்புற கிரில், கிளாஸ் பிளாக் விண்டோ லைன் ட்ரிம் மற்றும் M ரியர் ஸ்பாயிலர் உள்ளது. இவை அனைத்தும் ஸ்டான்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது.
புதிய பி.எம்.டபிள்யூ. மாடல், i7 M70 இருவித 2-டோன் பெயின்ட் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில் ஸ்டான்டர்டு பெயின்ட் ஆப்ஷன்களில்- ஆக்சைடு கிரே, அவென்டுரைன் ரெட், டான்சனைட் புளூ மற்றும் டிராவிட் கிரே உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இவை அனைத்துடன் பிளாக் சஃபையர் ஃபினிஷ் செய்யப்படுகிறது. இவைதவிர பி.எம்.டபிள்யூ. நிறுவனம் லிக்விட் காப்பர் மற்றும் பிளாக் சஃபையர் நிற ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. இதற்கு ரூ. 13 லட்சம் வரை கூடுதல் செலவாகும்.
இன்டீரியர் மற்றும் அம்சங்கள் :
புதிய பி.எம்.டபிள்யூ. i7 M70 மாடலின் இந்திய வேரியண்டில் ஏராளமான இன்டீரியர் அம்சங்கள் ஆப்ஷன்களாக வழங்கப்படுகின்றன. இதில் ஐந்து ஸ்டான்டர்டு ஆப்ஷன்களும், ஏழு கட்டண ஆப்ஷன்களும் அடங்கும். ஸ்டான்டர்டு இன்டீரியர் ஸ்கீம்கள்- லெதர் மெரினோ டார்டுஃபோ, லெதர் மெரினோ மோச்சா, லெதர் மெரினோ அமரோன், லெதர் மெரினோ பிளாக் மற்றும் லெதர் மெரினோ ஸ்மோக் வைட் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
ஆப்ஷனல் இன்டீரியர் ஸ்கீம்களில்- லெதர் மெரினோ ஸ்மோக் வைட் மற்றும் கஷ்மியர் வுல், லெதர் மெரினோ பிளாக் மற்றும் கஷ்மியர் வுல், லெதர் மெரினோ மற்றும் டர்டுஃபோ, லெதர் மெரினோ மற்றும் ஸ்மோக் வைட், லெதர் மெரினோ மற்றும் கான்டென்ட்ஸ் பிளாக், லெதர் மெரினோ மற்றும் அமரோன் மற்றும் லெதர் மெரினோ மற்றும் கான்டென்ட்ஸ் மோச்சா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
இவை தவிர ஸ்டான்டர்டு உபகரணங்கள் பிரிவில் பி.எம்.டபிள்யூ. i7 M70 மாடல் M இன்டீரியர் பேக்கேஜ்- M ஸ்டீரிங், M ஃபூட்ரெஸ்ட், இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் M பவர்பூஸ்ட் அனிமேஷன் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் i7 எக்ஸ்டிரைவ் 60 மாடலில் உள்ள டூயல் ஸ்கிரீன், எக்சிகியுடிவ் லாஞ்ச் சீட்டிங், ஹீடெட், வென்டிலேடட் மற்றும் மசாஜ் சீட்கள், போயர் மற்றும் வில்கின்ஸ் டைமன்ட் சரவுன்ட் சவுன்ட் ஆடியோ சிஸ்டம், 4 ஜோன் ஆட்டோ கிளைமேட் கண்ட்ரோல், சாஃப்ட் க்ளோஸ் கதவுகள் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்படுகின்றன.
பவர்டிரெயின் விவரங்கள் :
இந்திய சந்தைக்கான பி.எம்.டபிள்யூ. i7 M70 மாடலில் டுவின் மோட்டார் செட்டப் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 660 ஹெச்பி பவர், 110 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 3.7 நொடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு அதிகபட்சம் 250 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
இந்த மாடலில் 101.7 கிலோவாட் ஹவர் லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 560 கிலோமீட்டர்கள் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. சார்ஜிங்கை பொருத்தவரை 22 கிலோவாட் ஏசி சிஸ்டம் வழங்கப்படுகிறது. இது காரை 5 மணி 30 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்துவிடும். இத்துடன் 195 கிலோவாட் டிசி செட்டப் காரை 10-இல் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய வெறும் 34 நிமிடங்களையே எடுத்துக் கொள்கிறது.
வெளியீட்டு விவரம் :
இந்திய சந்தையில் புதிய பி.எம்.டபிள்யூ. i7 M70 மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. விலையை பொருத்தவரை தற்போதைய i7 எக்ஸ்டிரைவ் 60 மாடல் விலை ரூ. 1 கோடியே 95 லட்சம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய M70 மாடலின் விலை இதை விட சற்று அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…