automobile
புதிய பஜாஜ் பிளாட்டினா 110 ABS அறிமுகம்..! இன்னும் அதிக மைலேஜ் உடன் ஆச்சரிய மூட்டும் விலையிலா..?
இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தி நிறுவனமான பஜாஜ் பிளாட்டினா 110 ABS பி-எஸ் 6 பேஸ்-2 மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்திய அரசாங்கத்தின் புதிய போக்குவரத்து கொள்கையின்படி இந்த வாகனம் தயாரிக்கப்பட்டுள்ளது. e20 பெட்ரோலில் ஒடக்கூடியதாக உள்ளது. பெட்ரோல் விலை உயர்வின் காரணமாக மக்கள் அனைவரும் மைலேஜ் அதிகம் தரும் வாகனங்களின் பக்கம் திரும்புகின்றனர். பஜாஜ் இந்தியா மக்களிடையே அதன் சிறந்த மைலேஜ் அளிக்கும் வாகனங்களின் மூலம் நல்ல நம்பிக்கை பெற்றுள்ளது. பிளாட்டினா பைக்குகள் அதிக மைலேஜ் வழங்கக் கூடியதாக உள்ளது.
சிறப்பம்சங்கள் :
இந்த வண்டியின் முக்கிய சிறப்பம்சமாக பார்க்கப்படுவது இதுவரை யாரும் வழங்காத பாதுகாப்பு அம்சமான ஏபிஎஸ் பிரேக் தான். இது கூடுதல் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது. வாகனம் சீரான வேகத்தில் சென்று கொண்டிருக்கும் பொழுது எதிர்பாராத சூழ்நிலையில் பிரேக்கை அழுத்தும் பொழுது சக்கரம் சறுக நேரிடும். இதனால் கீழே விழுவதற்கான வாய்ப்பு உள்ளது. இதனை தடுப்பதற்காக தான் ஏ பி எஸ் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு சிறிய குடும்பத்திற்கு தேவையான நீளமான இருக்கைகளை கொண்டுள்ளது. டியூப்லெஸ் டயர் மற்றும் சௌகாரியா பயணத்திற்கு சொகுசான சஸ்பென்ஸ்களை கொண்டு வருகிறது.
எஞ்சின்:
115 சிசி போர் ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டர் ஏர்கூல்டு இன்ஜின் உடன் வருகிறது. மேலும் பி எஸ் 6 தரத்தில் எலக்ட்ரானிக் இன்ஜெக்ஷன் உடன் வருகிறது. இது 8.6ps பவரையும் 9.4nm டார்க்கையும் வழங்குகிறது. புதிய மாறுபாடுகளுடன் இரண்டு கண்ணாடிகள் வருகிறது. இதனால் பின்வரும் வண்டிகளை பார்க்க எளிதாக இருக்கும். இதைத் தவிர பெரிய ஸ்போர்ட்ஸ் பைக்கில் வழங்கக்கூடிய ஹேண்ட் காட் இந்த 110 சிசி பைக்கில் வருகிறது. மேலும் இது மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது அவை கருப்பு,சிவப்பு மற்றும் நீலம் ஆகும்.
இந்த புதுவித வடிவமைப்பும் சிறந்த தொழில்நுட்பத்துடன் அதிக பாதுகாப்பு அம்சத்துடன் வருவதால் மக்களிடையே கூடுதல் வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏபிஎஸ் பிரேக் 240mm டிஸ்க் உடன் பொருந்தி வருகிறது. இதன் காரணமாக சக்கரங்கள் சறுக்காமல் விபத்துகளை தவிர்க்க முடியும். இந்த ஒரு பைக் மட்டுமே இந்த பிரிவின் பாதுகாப்பு அம்சம் நிறைந்த பைக்காக உள்ளது. இதன் விலை சுமார் 65000 ரூபாய் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கப்பெறுகிறது.