உலகின் முன்னணி ஆட்டோமொபைல் சந்தையாக இந்தியா விளங்குகிறது. ஆட்டோமொபைல் சந்தையில் ஆண்டின் இரண்டாவது அரையாண்டு காலக்கட்டம், நிறுவனங்களுக்கு மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. அரையாண்டின் மத்தியிலும், நிறைவிலும் அதிக பண்டிகைகள் வருவதே இதற்கு முக்கிய காரணம் ஆகும்.
பல்வேறு நிறுவனங்களும் தங்களின் புதிய வாகனங்களை பண்டிகை காலக்கட்டத்தை ஒட்டி அறிமுகம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளன. 2023 ஆண்டின் இரண்டாவது அரையாண்டு காலக்கட்டம் ஜூலை 01 ஆம் தேதியுடன் துவங்கிவிட்டது. இந்த நிலையில், இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் கார் பிரிவில் ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய கார் மாடல்கள் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.
கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் – ஜூலை 4 :
சர்வதேச சந்தையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் வரும் நாட்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அதிகம் எதிர்பார்க்கப்படும் மாடலாக இருக்கும் செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் ஏராளமான காஸ்மெடிக் மாற்றங்கள், புதிய அம்சங்களுடன் உருவாகி இருக்கிறது.
இந்த காரின் முன்புறம் மேம்பட்ட தோற்றம் கொண்டிருக்கிறது. இத்துடன் முற்றிலும் புதிய இன்டீரியர், டுவின் கனெக்டெட் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன்கள் உள்ளன. இத்துடன் ADAS சூட் வழங்கப்படுகிறது. இந்த கார் 1.5 லிட்டர் பெட்ரோல், டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என்று தெரிகிறது.
மாருதி சுசுகி இன்விக்டோ – ஜூலை 5 :
டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் மாடலின் ரிபேட்ஜ் செய்யப்பட்ட மாடலாக மாருதி சுசுகி இன்விக்டோ மாடல் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த கார் ஜூலை 5 ஆம் தேதி இந்திய சந்தையில் வெளியாக இருக்கிறது. ஃபிளாக்ஷிப் MPV மாடலில் மாருதி நிறுவனம் ஹைப்ரிட் ஆப்ஷனை வழங்க முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.
அந்த வகையில் மாருதி இன்விக்டோ மாடலில் 183 ஹெச்பி பவர் கொண்ட 2.0 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட் என்ஜின் வழங்கப்படும் என்று தெரிகிறது. இத்துடன் 2.0 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 172 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த காரில் ADAS வசதிகள் வழங்கப்படாது என்று கூறப்படுகிறது.
ஹூண்டாய் எக்ஸ்டர்- ஜூலை 10 :
கிரான்ட் i10 நியோஸ் மற்றும் ஆரா மாடல்களை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் ஹூண்டாய் எக்ஸ்டர் மாடல், நிறுவனத்தின் சிறிய எஸ்யுவி ஆகும். இந்திய சந்தையில் ஹூண்டாய் எக்ஸ்டர் மாடல் டாடா பன்ச் மற்றும் சிட்ரோயன் C3 மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. அளவில் சிறிய மாடல் என்ற போதிலும் இந்த காரில் எஸ்யுவி ஸ்டைலிங் மற்றும் தோற்றம் வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய எக்ஸடர் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம். இந்த என்ஜினுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. செயல்திறனை பொருத்தவரை இந்த ன்ஜின் 3 ஹெச்பி வரையிலான பவர் வெளிப்படுத்தும் என்று தெரிகிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் GLC :
புதிய பென்ஸ் GLC மாடலின் சரியான வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும், இந்த மாடல் ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம். இந்த காருக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 50 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸ் 2-nd Gen GLC மாடல் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின், GLC 220d மாடலில் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என்று தெரிகிறது. சர்வதேச சந்தையில் இந்த என்ஜின்கள் முறையே 204 ஹெச்பி/320 நியூட்டன் மீட்டர்கள் மற்றும் 197 ஹெச்பி பவர், 440 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இரண்டு வேரியண்ட்களுடன் 48 வோல்ட் இன்டகிரேடெட் செய்யப்பட்ட ஸ்டார்டட் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இது கூடுதலாக 23 ஹெச்பி வரையிலான திறன் வழங்குகிறது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…