அதிநவீன ஆடம்பர வசதிகள் நிறைந்த புதிய பென்ஸ் காரானது 78 லட்சம் ரூபாயிலிருந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனமானது தனது புதிய தலைமுறை இந்திய சந்தையில் தற்போது அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த முறை இ கிளாஸ் மாடலின் விலை 78 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்கின்றது. புதிய 6-ம் தலைமுறை இ கிளாஸ் மாடலானது லாங் வீல் பேஸ் மற்றும் வலது புற ஸ்ரீ வீலுடன் அறிமுகமாகி இருக்கிறது. உலகின் வேறு எந்த நாட்டிலும் இந்த மாடல் இந்த வடிவில் இதுவரை அறிமுகம் செய்யப்படவில்லை.
புதிய பென்ஸ் இ கிளாஸ் மாடல் 3 வெர்ஷன்களில் அறிமுகமாகி இருக்கின்றது. பவர்டிரெயினை பொறுத்தவரையில் இந்த கார் 2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆபரேஷன்களில் கிடைக்கின்றது. இந்த காருடன் மெர்சிடிஸ் E450 பெட்ரோல் 4-மேடிக் வெர்ஷனும் அறிமுகம் செய்யப்பட்டது
இந்த இன்ஜின்களுடன் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. L450 பெட்ரோல், 4 மேட்ரிக் வெர்ஷனும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடலின் விலை ரூ. 92 லட்சத்து 50 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய மெர்சிடிஸ் இ க்ளாஸ் மாடலின் 200 மற்றும் 220 வெர்ஷன்களுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகின்றது. புதிய E450 பெட்ரோல் 4 மேட்ரிக் மாடலுக்கான முன்பதிவுகள் நவம்பர் மாதம் துவங்க இருக்கின்றது. இந்த கார் பிஎம்டபிள்யூ 5 சீரியஸ் மற்றும் ஆடி ஏ6 மாடல்களுக்கு போட்டியாக சந்தையில் நுழைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…