டொயோட்டா நிறுவனம் முற்றிலும் புதிய 5th Gen லேன்ட் குரூயிசர் பிராடோ மாடலுக்கான முதல் டீசரை வெளியிட்டது. சர்வதேச சந்தையில், இந்த கார் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய லேன்ட் குரூயிசர் பிராடோ மாடல் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட 3rd Gen லெக்சஸ் GX எஸ்.யு.வி. போன்ற பவர்டிரெயின் ஆப்ஷன்களை கொண்டிருக்கும்.
சர்வதேச சந்தையில், 2009 ஆம் ஆண்டு இந்த காரின் 4th Gen மாடல் விற்பனைக்கு வந்த நிலையில், புதிய மாடலுக்கான எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்து இருக்கிறது. புதிய லேன்ட் குரூயிசர் பிராடோ மாடலின் முதல் டீசர்- காரில் சில்ஹவுட் இடம்பெற்று இருக்கிறது. இதன் அருகில் 1960-களை சேர்ந்த FJ40 லேன்ட் குரூயிசர் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.
டிசைன் மற்றும் தோற்றம் :
இந்த டீசரில் புதிய கார் விவரங்கள் அதிகளவில் இடம்பெறவில்லை. எனினும், புதிய லேன்ட் குரூயிசர் மாடல் தற்போதைய மாடலை விட, அப்ரைட் மற்றும் பாக்ஸ் தோற்றம் கொண்டிருக்கும் என்று மட்டும் தெரியவந்துள்ளது. இதன் வெளிப்புற தோற்றம் கிட்டத்தட்ட லெக்சஸ் GX போன்றே காட்சியளிக்கிறது. லெக்சஸ் GX மற்றும் லேன்ட் குரூயிசர் பிராடோ மாடல்கள் ஒரே பிளாட்ஃபார்மில் உருவாகி இருக்கின்றன.
அதன்படி புதிய லேன்ட் குரூயிசரின் ஆஃப்-ரோடு கியர், சில இன்டீரியர் அம்சங்கள் மற்றும் பாடி பேனல்கள் இரு மாடல்களிலும் ஒரே மாதிரியாகவே வழங்கப்படும் என்று தெரிகிறது. இந்த காரின் இறுதி வெர்ஷனில் டொயோட்டா பாரம்பரிய அம்சங்கள் இடம்பெற்று இருக்கும் என்று கூறப்படுகிறது. லேன்ட் குரூயிசர் பிராடோ மாடலில் வட்ட வடிவ ஹெட்லேம்ப், டிசைன் உள்ளிட்டவை ரெட்ரோ டிசைன் கொண்டிருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த காரின் பவர்டிரெயின் பற்றிய விவரங்கள் ரகசியமாகவே வைக்கப்பட்டு உள்ளன. ஆனாலும், இந்த கார் பெட்ரோல், பெட்ரோல்-ஹைப்ரிட் மற்றும் டீசல் என ஒவ்வொரு சந்தைக்கும் ஏற்ப பல்வேறு பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம். இத்துடன் ஒன்றுக்கும் மேற்பட்ட கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படலாம்.
வட அமெரிக்க சந்தை :
புதிய தலைமுறை லேன்ட் குரூயிசர் பிராடோ முதல் முறையாக வட அமெரிக்க சந்தையில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த மாடல் பிரபலமான டொயோட்டா 4ரன்னர் எஸ்.யு.வி.-இன் மேல் நிலை நிறுத்தப்பட இருக்கிறது. டொயோட்டா நிறுவனம் பிராடோ மற்றும் லேன்ட் குரூயிசர் 300 மாடல்களை இதுவரை வட அமெரிக்க சந்தையில் விற்பனை செய்ததே இல்லை.
இந்த கார்கள் இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் சில நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது. வட அமெரிக்காவில் புதிய மாடல் ‘லேன்ட் குரூயிசர்’ என்ற பெயரில் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்று தெரிகிறது. புதிய லேன்ட் குரூயிசர் மாடல் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படலாம். ஆனால், இது தற்போதைக்கு நடைபெறாது என்றே இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…