automobile
தாய்லாந்து ட்ரிப் போகனுமா? EV நிறுவனத்தின் வேற லெவல் அறிவிப்பு.. அது என்ன தெரியுமா..?
எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியளரான ஒகாயா இந்திய சந்தையில் தனது இரண்டாவது ஆண்டு விழாவை கொண்டாடி வருகிறது. ஆண்டு விழாவை ஒட்டி தனது எலெர்க்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி அறிவித்து இருக்கிறது. இத்துடன் ஜூலை 31 ஆம் தேதி வரை ‘மான்சூன் கேஷ்பேக்’ திட்டத்தை அறிவித்து, வழங்கி வருகிறது.
இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஃபேம் 2 திட்ட பலன்கள் குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. இதன் காரணமாக எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை பெருமளவு குறைந்தது. இந்த நிலையில், தான் ஒகாயா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவைகளை அறிவித்து இருக்கிறது.
சலுகை விவரங்கள் :
சிறப்பு சலுகைகளின் கீழ் ஒகாயா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ரூ. 74 ஆயிரத்து 999 எனும் மிகக் குறைந்த விலையில் வாங்கிட முடியும். இது ஒகாயா கிளாஸ்ஐகியூ பிளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேஸ் வேரியண்டிற்கானது ஆகும். ஒகாயா ஃபாஸ்ட் F2T மற்றும் ஒகாயா ஃபாஸ்ட் F2B எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ரூ. 1 லட்சம் பட்ஜெட்டிற்குள் கிடைக்கிறது.
இவை தவிர ஒகாயா நிறுவனம் ஜூலை 31 ஆம் தேதி வரை ‘மான்சூன் கேஷ்பேக் ஸ்கீம்’ வழங்குகிறது. இதில் ஒகாயா ஃபாஸ்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 5 ஆயிரம் கேஷ்பேக், ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள தாய்லாந்து செல்வதற்கான வாய்ப்பை வென்றிட முடியும். இந்த சலுகை ஃபாஸ்ட் F4, ஃபாஸ்ட் F3, ஃபாஸ்ட் F2B மற்றும் ஃபாஸ்ட் F2T போன்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு பொருந்தும்.
தாய்லாந்து சுற்று பயணம் :
ஒவ்வொரு பர்சேஸ்-க்கும் ரூ. 5 ஆயிரம், ரூ. 2 ஆயிரம், ரூ. 1500, ரூ. 1000 மற்றும் ரூ. 500 வரையிலான கேஷ்பேக்குகள் வழங்கப்படுகின்றன. மாபெரும் பரிசாக நான்கு நாட்கள் தாய்லாந்து செல்வதற்கான பயணத்தை வென்றிட முடியும். இந்த பரிசு ஒருவருக்கு மட்டும் வழங்கப்படுகிறது. வெற்றியாளர் பின்னர் அறிவிக்கப்படுவர் என்று தெரிகிறது.
இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தை விற்பனையில் சரிவை சந்தித்து வரும் நிலையில், ஒகாயா தனது வாகனங்களுக்கு அசத்தல் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இந்த சலுகைகள் விற்பனையை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக பல்வேறு முன்னணி எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள் தங்களது எலெக்ட்ரிக் வாகன விலையை உயர்த்துவதாக அறிவித்தன. மத்திய அரசு ஃபேம் 2 திட்ட பலன்களை குறைத்ததே, வாகன விற்பனை சரிவு மற்றும் விலை உயர்வுக்கு காரணம் ஆகும்.