Connect with us

automobile

ஒன்றல்ல மூன்று..மேட் இன் இந்தியா எலெக்ட்ரிக் 2-வீலர்களை அறிமுகம் செய்த ஒன் எலெக்ட்ரிக்..!

Published

on

ev scooter

ஒன் எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய சந்தையில் மூன்று எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய இருசக்கர வாகனங்கள் இந்தியா மட்டுமின்றி சர்வதேச சந்தையிலும் விற்பனை செய்யப்பட இருக்கின்றன. இதில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்கள் உள்ளன. மூன்று எலெக்ட்ரிக் வாகனங்களும் முழு சார்ஜ் செய்தால் 110 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகின்றன.

உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்டு, ஒரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்தி இருக்கும் முதல் நிறுவனம் என்ற பெருமையை ஒன் எலெக்ட்ரிக் பெற்று இருக்கிறது. இதுதவிர மேலும் இரண்டு காப்புரிமைகளை பெற காத்திருப்பதாக ஒன் எலெக்ட்ரிக் தெரிவித்துள்ளது. தற்போது ஒன் எலெக்ட்ரிக் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்போர்ட் பைக், எலெக்ட்ரிக் வி2 எலெக்ட்ரிக் பைக் மற்றும் ஒன் எலெக்ட்ரிக் XR எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உள்ளிட்டவைகளை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

விரைவில் இந்த மாடல்கள் இந்தியா மற்றும் ஆப்ரிக்கா சந்தைகளில் விற்பனை செய்யப்பட உள்ளன. இதுதவிர தெற்கு ஆசியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் களமிறங்குவது பற்றிய ஆய்வு பணிகளை ஒன் எலெக்ட்ரிக் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

ஒன் எலெக்ட்ரிக் ஸ்போர்ட் எலெக்ட்ரிக் பைக்:

ஒன் எலெக்ட்ரிக் ஸ்போர்ட் பைக் மாடலில் உள்ள 5 கிலோவாட் ஹவர் மோட்டார், 200 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 3.65 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு உள்ளது.

one electric 1

one electric 1

இந்த பைக் மணிக்கு 60 கிலோமீட்டர்கள் வேகத்தை 7.5 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டிருக்கிறது. மேலும் மணிக்கு அதிகபட்சம் 90 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இந்த பைக்கின் இருபுறமும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டு உள்ளன. ஒன் எலெக்ட்ரிக் ஸ்போர்ட் எலெக்ட்ரிக் பைக் இகோ மோடில் 110 கிலோமீட்டர்களுக்கும் அதிக ரேன்ஜ் வழங்குகிறது.

ஒன் எலெக்ட்ரிக் வி2 எலெக்ட்ரிக் பைக் :

one electric 2

one electric 2

ஒன் எலெக்ட்ரிக் ஸ்போர்ட் பைக்கில் உள்ளதை போன்ற அம்சங்களே ஒன் எலெக்ட்ரிக் வி2 மாடலிலும் வழங்கப்பட்டு உள்ளது. எனினும், இந்த மாடலில் அதிகபட்ச வேகம் மணிக்கு 90 கிலோமீட்டர்கள் என கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த மாடலும் மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தை 7.5 நொடிகளில் எட்டிவிடும். இந்த பைக் முழு சார்ஜ் செய்தால் இகோ மோடில் 110 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது.

ஒன் எலெக்ட்ரிக் XR எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அம்சங்கள் :

ஒன் எலெக்ட்ரிக் XR எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 2.5 கிலோவாட் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இது அதிகபட்சம் 130 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. மேலும் மணிக்கு அதிகபட்சம் 55 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. நகர பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் இந்த ஸ்கூட்டரில் டிரம் பிரேக்குகள் வழங்கப்பட்டு உள்ளன.

one electric xr

one electric xr

வினியோகம் சார்ந்த பயன்பாடு வழங்கும் என்பதால், இந்த ஸ்கூட்டரில் அதிக இடவசதி மற்றும் ஓட்டுபவரின் சவுகரியத்தை அதிகப்படுத்தும் வகையில் பேக்ரெஸ்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 120-க்கும் அதிக ரேன்ஜ் வழங்குகிறது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *