automobile
இந்திய சந்தையின் டாப் 5 வாகன உற்பத்தியாளர்கள் – முதலிடம் யாருக்கு தெரியுமா?
இந்திய சந்தையில் மே 2023 மாதத்திற்கான வாகன விற்பனை விவரங்களை ஆட்டோமொபைல் விற்பனையாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்டு உள்ளது. அதன் படி ஒட்டுமொத்த வாகனங்கள் விற்பனை வருடாந்திர அடிப்படையில் பத்து சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது.
மே 2023 நிலவரப்படி இருசக்கர வாகனங்கள் விற்பனை வருடாந்திர அடிப்படையில் 9.32 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் 13 லட்சத்து 69 ஆயிரத்து 924 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், 2023 மே மாதம் 14 லட்சத்து 93 ஆயிரத்து 234 யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன.
நிறுவனங்கள் அடிப்படையில் பார்க்கும் போது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்திய இருசக்கர வாகனங்கள் விற்பனையில் முன்னணி பிராண்டாக உள்ளது. சந்தையில் 35.54 சதவீதம் பங்குகளை பெற்று இருக்கிறது. ஹீரோ நிறுவனத்தின் சந்தை மதிப்பு கடந்த ஆண்டு 37.49 சதவீதமாக இருந்த நிலையில் இந்த ஆண்டு 35.54 சதவீதமாக சரிவடைந்துள்ளது.
இதைத் தொடர்ந்து ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் 18.05 சதவீத பங்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது ஹோண்டா நிறுவனத்தின் சந்தை பங்குகளும் சரிவடைந்து இருக்கிறது. டிவிஎஸ் மோட்டார் கம்பெனி மற்றும் பஜாஜ் ஆட்டோ நிறுவனங்கள் முறையே மூன்று மற்றும் நான்காவது இடங்களை பிடித்துள்ளன.
டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 13.59 சதவீதத்தில் இருந்து இந்த முறை 16.89 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது. பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் சந்தை மதிப்பு 2022 மே மாதம் 10.59 சதவீதமாக இருந்து தற்போது 12.47 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது. இந்திய இருசக்கர வாகனங்கள் சந்தையில் ராயல் என்பீல்டு நிறுவனம் ஐந்தாவது இடத்தில் உள்ளது. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் சந்தை மதிப்பு 3.51 சதவீதத்தில் இருந்து 4.59 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது.
மே 2023 வாக்கில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் சந்தையில் அமோக வரவேற்பு கிடைத்தது. இந்தியாவில் ஜூன் மாதத்தில் இருந்து ஃபேம் 2 திட்டத்திற்கான மானியம் அதிரடியாக குறைக்கப்பட்டு இருப்பதை அடுத்து கடந்த மாத விற்பனை அதிகரித்தது