Connect with us

automobile

எலெக்ட்ரிக், ICE வரிசையில் CNG ஆப்ஷனுடன் விற்பனைக்கு வரும் டாடா கர்வ்?

Published

on

Tata-Curvv

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கர்வ் மாடல் இன்டர்னல் கம்பஷன் என்ஜின் (ICE) மற்றும் எலெக்ட்ரிக் பவர்டிரெயின்களில் கிடைக்கும் என்பது ஏற்கனவே அறிந்ததே. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் கான்செப்ட் ஸ்கெட்ச்களில் புதிய மிட்சைஸ் எஸ்யுவி மாடல் CNG கிட் வசதியுடன் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.

Tata-Curvv 1

Tata-Curvv 1

கான்செப்ட் வரைபடங்களின் படி டாடா மாடலின் டேஷ்போர்டில் கிளைமேட் கண்ட்ரோல் பேனல் மற்றும் CNG பட்டன் காணப்படுகிறது. தற்போதைய வரைபடங்களை டாடா மோட்டார்ஸ் வெளியிட்டு இருப்பதை அடுத்து, இது ப்ரோடக்‌ஷன் வடிவில் வழங்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. அதன்படி டாடா கர்வ் மாடலில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய டுவின் சிலிண்டர் தொழில்நுட்பம் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய டுவின் சிலிண்டர் தொழில்நுட்பம் காரணமாக காரில் அதிகளவு பூட் ஸ்பேஸ் கிடைக்கும். இந்த தொழில்நுட்பத்திற்கான காப்புரிமையை பெற டாடா மோட்டார்ஸ் ஏற்கனவே விண்ணப்பித்து இருக்கிறது. இந்த தொழில்நுட்பம் அல்ட்ரோஸ் CNG மாடலில் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது. மேலும் டாடா டியாகோ மற்றும் டிகோர் CNG மாடல்களில் வழங்கப்படுவது உறுதியாகி இருக்கிறகது.

Tata-Curvv

Tata-Curvv 1

பன்ச் CNG மாடலில் டுவின் சிலிண்டர் செட்டப் வழங்கப்பட இருக்கிறது. இதே மாடல் 2023 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக அறிமுகம் செய்யப்பட இருக்கும் நெக்சான் பேஸ்லிஃப்ட் மாடலிலும் CNG கிட் வழங்கப்படும் என்று தெரிகிறது. டாடா நெக்சான் மற்றும் கர்வ் மாடல்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான தொழில்நுட்ப உபகரணங்களை கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

Tata-Curvv

Tata-Curvv

டூயல் மோட்டார் செட்டப் உடன் அறிமுகம் செய்யப்பட இருக்கும் டாடா கர்வ் எலெக்ட்ரிக் மாடல் கிட்டத்தட்ட 400-இல் இருந்து 500 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என்று தெரிகிறது. இதன் இன்டர்னல் கம்பஷன் என்ஜின் கொண்ட மாடலில் 125 ஹெச்பி பவர், 225 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்ட 1.2 லிட்டர் டைரக்ட் இன்ஜெக்‌ஷன் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம். இத்துடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம்.

புதிய டாடா கர்வ் மாடலில் 360-டிகிரி கேமரா, ஆட்டோ பார்க் அசிஸ்ட் மற்றும் டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல் வழங்கப்படும் என்று தெரிகிறது. இதில் கிளைமேட் கண்ட்ரோல் அம்சத்தை இரு டாகில்கள் மூலம் இயக்க முடியும். கேமரா மற்றும் ஆட்டோ பார்க் வசதியை வலதுபுறம் மேல்பக்கமாக இருக்கும் பட்டன்கள் மூலம் இயக்க முடியும்.

Tata-Curvv

Tata-Curvv

சமீபத்திய ஸ்பை படங்கள் மற்றும் காப்புரிமை விவரங்களின் படி நெக்சான் பேஸ்லிஃப்ட் மாடல்கள் இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. டாடா கர்வ் எலெக்ட்ரிக் மற்றும் இன்டர்னல் கம்பஷன் என்ஜின் கொண்ட மாடல்கள் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என்றும், இதன் எலெக்ட்ரிக் மாடல் தான் முதலில் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

google news