Connect with us

automobile

எதிர்பார்த்தது ஒன்று, நடக்கப் போவது ஒன்று.. டாடாவை புரிஞ்சிக்கவே முடியல..!

Published

on

Tata-Curvv-Concept

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் ஃபிரெஸ்ட் (Frest) என்ற பெயரை தனது காருக்கு பயன்படுத்த டிரேட்மார்க் கோரி விண்ணப்பித்து இருந்தது. இந்த பெயர் 2023 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் டாடா மோட்டார்ஸ் காட்சிக்கு வைத்த டாடா கர்வ் கான்செப்ட் எஸ்யுவி மாடலின் ப்ரோடக்‌ஷன் வெர்ஷனுக்கு சூட்டப்படும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.

2023 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் அனைவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் டாடா கர்வ் கான்செப்ட் இருந்தது. கூப் போன்ற வெளிப்புற ஸ்டைலிங், உள்புறம் அழகிய இன்டீரியர் உள்ளிட்டவை அனைவரின் பார்வையை பெற்றது. இந்த கான்செப்ட் ப்ரோடக்‌ஷன் வெர்ஷனிலும் இதே போன்ற அம்சங்களை எதிர்பார்க்கலாம்.

Tata-Curvv-2

Tata-Curvv-2

டாடா கர்வ் எலெக்ட்ரிக் மாடல் :

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டாடா கர்வ் கான்செப்ட் எஸ்யுவி-இன் எலெக்ட்ரிக் வெர்ஷனை அடுத்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த எஸ்யுவி மா டல் டாடா நிறுவனத்தின் மேம்பட்ட ஜென் 2 எலெக்ட்ரிக் பவர்டிரெயின் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. அதன்படி டாடா கர்வ் எஸ்யுவி மாடல் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 450 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என்று கூறப்படுகிறது. இத்துடன் AWD எனப்படும் ஆல்-வீல்-டிரைவ் செட்டப் வழங்கப்படலாம்.

Tata-Curvv-Concept-1

Tata-Curvv-Concept-1

இன்டர்னல் கம்பஷன் என்ஜின் :

டாடா கர்வ் கான்செப்ட் எஸ்யுவி இன்டர்னல் கம்பஷன் என்ஜின் (ICE) வடிவிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஆனால், டாடா கர்வ் மாடலின் எலெக்ட்ரிக் மாடலை தொடர்ந்தே, பெட்ரோல் வெர்ஷ் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. டாடா கர்வ் ICE வெர்ஷன் 2025 வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்ட நிலையில், இரு வெர்ஷன்களும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகம் செய்யப்பட்டு விடும் என்று தெரிகிறது.

Tata-Curvv-EV-1

Tata-Curvv-EV-1

போட்டி நிறுவன மாடல்கள் :

டாடா கர்வ் ICE வெர்ஷன் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், ஸ்கோடா குஷக் மற்றும் இதர சி பிரிவு எஸ்யுவி மாடல்களுக்கு போட்டியாக அமையும். புதிய டாடா கர்வ் எலெக்ட்ரிக் மாடல் எம்ஜி ZS EV மற்றும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் மாடல்களுக்கு போட்டியாக அமையும் என்று தெரிகிறது.

Tata-Curvv-EV 2

Tata-Curvv-EV 2

என்ஜின் விவரங்கள் :

டாடா கர்வ் ICE மாடலில் புதிய 1.2 லிட்டர், டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின், 1.5 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இவை முறையே 125 ஹெச்பி பவர், 225 நியூட்டன் மீட்டர் டார்க் மற்றும் 168 ஹெச்பி பவர், 280 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கும்.

google news