கவாசகி நிறுவனம் ஜப்பான் சந்தைக்காக 399சிசி வெர்ஷன் மூலம் சமீபத்தில் தான் எலிமினேட்டர் பெயரை மீட்டெடுத்தது. தற்போது கவாசகி நிறுவனம் புதிதாக 451சிசி மாடல் ஒன்றை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்வதற்காக உருவாக்கி வருகிறது என தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில், இந்த மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
புதிய கவாசகி எலிமினேட்டர் மாடலில் 451சிசி, பேரலல் டுவின் என்ஜின் வழங்கப்படுகிறது. இது ஏற்கனவே கவாசகி நின்ஜா மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் 399சிசி யூனிட் தான். எனினும், புதிய மாடலில் 399சிசி என்ஜினின் ஸ்டிரோக் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.
டிசைனஐ பொருத்தவரை எலிமினேட்டர் மாடல் குரூயிசர் ரக வேரியண்ட் ஆகும். இதில் பிளாக்டு அவுட் ரெட்ரோ எலிமென்ட்கள் உள்ளன. முன்புறம் ரேக்டு அவுட் ஃபினிஷ் மற்றும் அசத்தலான டிசைன் வழஹ்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள டுவின் ஷாக் அப்சார்பர்கள் குரூயிசர் மாடலுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
கவாசகி எலிமினேட்டர் மாடல் ஸ்டான்டர்டு மற்றும் SE என இருவித வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவை இரண்டும் தோற்றத்தில் ஒரே மாதிரி காட்சியளிக்கின்றன. இதன் SE வேரியண்டில் டூயல் டோன் பெயின்ட், ஃபோர்க் கெய்ட்டர்கள், யுஎஸ்பி டைப் சி சார்ஜர் மற்றும் சிறிய ஃபிளை-ஸ்கிரீன் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
புதிய எலிமினேட்டர் மாடலில் சக்திவாய்ந்த என்ஜின் மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி கொண்ட டிஜிட்டல் டேஷ்போர்டு வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது. SE வேரியன்டில் மட்டும் யுஎஸ்பி டைப் சி சார்ஜர் வழங்கப்படுகிறது. இத்துடன் ஃபுல் எல்.இ.டி. லைட்டிங் வழங்கப்பட்டு உள்ளது.
கவாசகி எலிமினேட்டர் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எனினும், அறிமுகமாகும் பட்சத்தில் இந்த மாடல் ராயல் என்பீல்டு சூப்பர் மீடியோர் 650 மற்றும் பெனலி 502C போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும். முந்தைய கவாசகி எலிமினேட்டர் 175 மாடல் பிரீமியம் மாடலாக பார்க்கப்பட்டு, அதன் பின் அதிக யூனிட்கள் விற்பனையானது. இதைத் தொடர்ந்து தான் பஜாஜ் அவெஞ்சர் மாடல் இந்திய சந்தையில் அதீத வெற்றியை பதிவு செய்தது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…