இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் அறிமுகம் செய்ததில் முன்னணி நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் விளங்குகிறது. தனது பெட்ரோல், டீசல் கார்களை எலெக்ட்ரிக் வடிவில் மாற்றுவதில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மேலும் சில எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டாடா நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் மாடல்கள் அடுத்த மூன்று ஆண்டுகளில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அந்த வகையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கும் எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல்களின் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.
டாடா பன்ச் EV :
நீண்ட காலமாக அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படும் டாடா எலெக்ட்ரிக் கார் இது ஆகும். டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் வாகன அறிமுகங்களில், டாடா பன்ச் EV மாடல் முக்கிய பங்கு கொண்டிருக்கும் என்று தெரிகிறது. டாடா பன்ச் EV மாடல் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் நெக்சான் EV மாடலின் கீழ் நிலைநிறுத்தப்படுகிறது.
புதிய டாடா நெக்சான் EV மாடல் ஜிப்டிரான் தொழல்நுட்பத்தில் உருவாகி இருக்கும் என்று தெரிகிறது. அந்த வகையில், புதிய பன்ச் EV மாடலின் பேட்டரி பேக் மற்றும் ரேன்ஜ் உள்ளிட்டவை மற்ற மாடல்களில் உள்ளதை போன்றே இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
டாடா கர்வ் EV :
2023 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் கிட்டத்தட்ட உற்பத்திக்கு தயாரான நிலையில், டாடா கர்வ் EV மாடல் காட்சிக்கு வைக்கப்பட்டது. இதன் விற்பனை அடுத்த ஆண்டு துவங்குகிறது. மிட்-சைஸ் எஸ்யுவி-யான டாடா கர்வ் EV இன்டர்னல் கம்பஷன் என்ஜின் கொண்ட வேரியண்ட் மற்றும் எலெக்ட்ரிக் வாகனம் வடிவில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.
புதிய டாடா கர்வ் EV மாடல் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 500 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என்று எதிர்பார்க்கலாம். இந்த எலெக்ட்ரிக் காரின் டாப் என்ட் வேரியன்ட்களில் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்படும் என்று தெரிகிறது.
அம்சங்களை பொருத்தவரை டாடா கர்வ் EV மாடலில் டூயல் ஜோன் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம், டச் கண்ட்ரோல்கள், 2 ஸ்போக் ஸ்டீரிங் வீல், இலுமினேட் செய்யப்பட்ட டாடா லோகோ, 360 டிகிரி கேமரா சிஸ்டம், ஆட்டோ பார்க் அசிஸ்ட், ADAS சார்ந்த அம்சங்கள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
டாடா ஹேரியர் EV :
2023 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் டாடா கர்வ் EV மாடலுடன் டாடா ஹேரியர் EV கான்செப்ட் மாடலும் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. இந்த மாடலும் கிட்டத்தட்ட உற்பத்திக்கு தயார் நிலையில் காட்சியளித்தது. இந்த காரின் டிசைன் அம்சங்கள, ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஹேரியர் மற்றும் சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் மாடல்களிலும் பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது.
இந்திய சந்தையில் ஹேரியர் EV மாடல் நெக்சான் EV மேக்ஸ் மாடலின் மேல் நிலைநிறுத்தப்படுகிறது. இத்துடன் டூயல் மோட்டார் செட்டப் வழங்கப்படுகிறது. இதன் மூலம், இந்த கார் 4×4 எலெக்ட்ரிக் எஸ்யுவி-யாக இருக்கும்.
இந்த காரிலும் இலுமினேட் செய்யப்பட்ட டாடா லோகோ, க்லோஸ்டு-ஆஃப் முன்புற கிரில், மெல்லிய எல்இடி டிஆர்எல்கள், அகலமான ஏர் இன்லெட், மெட்டாலிக் பம்ப்பர், 2-டோன் அலாய் வீல்கள், எல்இடி ஸ்ட்ரிப் பார் வழங்கப்படுகிறது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…