மே 2023 மாதத்தில் மட்டும் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மோட்டார்சைக்கிள் விற்பனை 45.29 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. கடந்த மாதம் மட்டும் இந்தியாவில் 1 லட்சத்து 28 ஆயிரத்து 197 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. அந்த வகையில் 150-200சிசி பிரிவில் கடந்த மாத விற்பனை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
வருடாந்திர அடிப்படையில் இந்த பிரிவு இருசக்கர வாகனங்கள் 45.29 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. இந்த பிரிவில் கிடைக்கும் அனைத்து மாடல்களின் விற்பனையும் கணிசமாக அதிகரித்து இருக்கிறது. கடந்த மாதத்தில் மட்டும் 1 லட்சத்து 28 ஆயிரத்து 197 யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன. இது மே மாதத்தில் விற்பனையான 88 ஆயிரத்து 236 யூனிட்களை விட அதிகம் ஆகும்.
கடந்த மாத விற்பனையில் அபாச்சி மாடல் முன்னணியில் உள்ளது. மே 2023 மாதத்தில் அபாச்சி மாடல் 41 ஆயிரத்து 955 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. 2022 மே மாதத்தில் 27 ஆயிரத்து 044 அபாச்சி யூனிட்களே விற்பனையாகி இருந்தது. இதன் மூலம் வருடந்திர அடிப்படையில் அபாச்சி மாடல் 55.14 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதன் மூலம் அபாச்சி மாடல்கள் இந்த பிரிவில் 32.73 சதவீத பங்குகளை பெற்றுள்ளன.
அபாச்சி மாடலை தொடர்ந்து பஜாஜ் பல்சர் விற்பனை வருடாந்திர அடிப்படையில் 174.72 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. மே 2023 மாதத்தில் 35 ஆயிரத்து 189 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. கடந்த ஆண்டு மே மாதத்தில் பஜாஜ் நிறுவனம் 12 ஆயிரத்து 809 யூனிட்களையே விற்பனை செய்து இருந்தது. பல்சர் சீரிஸ் இந்த பிரிவில் 27.45 சதவீத பங்குகளை கொண்டிருக்கிறது.
டிவிஎஸ், பஜாஜ் ஆட்டோ நிறுவனங்களை தொடர்ந்து யமஹா நிறுவனத்தின் FZ மற்றும் R15 மாடல்கள் அதிகம் விற்பனையாகும் மாடல்கள் பட்டியலில மூன்று மற்றும் நான்காவது இடங்களை பிடித்துள்ளன. மே 2023 மாதத்தில் யமஹா FZ மாடல் 16 ஆயிரத்து 919 யூனிட்கள் விற்பனையானது. மே 2022 மாதத்தில் இது 15 ஆயிரத்து 068 யூனிட்களாக இருந்தது. இதன் மூலம் யமஹா FZ மாடல் வருடாந்திர அடிப்படையில் 12.28 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
மற்றொரு யமஹா மாடலான R15 கடந்த மாதம் 11 ஆயிரத்து 280 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. கடந்த ஆண்டு மே மாதத்தில் 7 ஆயிரத்து 120 யூனிட்கள் மட்டுமே விற்பனையான நிலையில், 58.43 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. யமஹா R15 மாடல் இந்த பிரிவில் 8.80 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது.
கடந்த மாதம் அதிக யூனிட்களை விற்ற டாப் 5 நிறுவனங்களில் கடைசி மாடலாக யமஹா MT15 உள்ளது. மேலும் டாப் 5 பிரிவில் மூன்று மாடல்களை கொண்ட நிறுவனமாக யமஹா விளங்குகிறது. கடந்த மாதம் யமஹா MT15 மாடல் 7 ஆயிரத்து 156 யூனிட்களே விற்பனையாகி இருக்கிறது. இது கடந்த ஆண்டு மே மாதத்தில் விற்பனையானதை விட 5.64 சதவீதம் குறைவு ஆகும். 2022 மே மாதத்தில் யமஹா நிறுவனம் 7 ஆயிரத்து 584 MT15 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. இந்த மாடல் 5.58 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…