Connect with us

automobile

2 மாடல்கள் தான்.. ஜூன் விற்பனையில் அமோக வளர்ச்சி – டொயோட்டா ஹேப்பி அண்ணாச்சி!

Published

on

Toyota-Innova-Hycross-Featured-img

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 19 ஆயிரத்து 608 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. இதில் உள்நாட்டில் மட்டும் 18 ஆயிரத்து 237 யூனிட்களும், வெளிநாடுகளுக்கு 1371 யூனிட்களும் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன. வருடாந்திர அடிப்படையில் பார்க்கும் போது, ஜூன் 2022 மாதத்தை விட இது 19 சதவீதம் அதிகம் ஆகும்.

Toyota-Innova-Hycross 2

Toyota-Innova-Hycross 2

எனினும், மாதாந்திர அடிப்படையில் பார்க்கும் போது விற்பனை சற்று குறைந்து இருக்கிறது. கடந்த மே 2023 மாதத்தில் டொயோட்டா நிறுவனம் 20 ஆயிரத்து 410 யூனிட்களை விற்பனையாகி இருந்தது. ஜூன் 2023 மாதத்தில் 19 ஆயிரத்து 608 யூனிட்கள் மட்டுமே விற்பனையானது. அரையாண்டு மற்றும் காலாண்டு விற்பனையை பார்க்கும் போது டொயோட்டா விற்பனை அதிகரித்து இருக்கிறது.

இந்த ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் டொயோட்டா நிறுவனம் 1 லட்சத்து 02 ஆயிரத்து 371 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இது கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடும் போது 36 சதவீதம் அதிகம் ஆகும். கடந்த ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் 75 ஆயிரத்து 017 யூனிட்களை டொயோட்டா விற்பனை செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Toyota-hyryder

Toyota-hyryder

காலாண்டு விற்பனையை பார்க்கும் போது ஏப்ரல் முதல் ஜூன் 2023 வரையிலான காலக்கட்டத்தில் 55 ஆயிரத்து 528 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இது கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் விற்பனையான 41 ஆயிரத்து 813 யூனிட்களை விட 33 சதவீதம் அதிகம் ஆகும். சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட அர்பன் குரூயிசர் ஹைரைடர், இன்னோவா ஹைகிராஸ் உள்ளிட்ட மாடல்களே விற்பனை அதிகரிக்க காரணம் என்று டொயோட்டா தெரிவித்து உள்ளது.

“டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் விற்பனையில் தொடர்ந்து வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. எங்களது அசத்தலான வாகனங்கள் காரணமாக ஜூன் மாதத்தில் நாங்கள் 19 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறோம். அர்பன் குரூயிசர் ஹைடைர் மற்றும் இன்னோவா ஹைகிராஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து, வாடிக்கையாளர்கள் எங்களுக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்கி வருகின்றனர்,” என்று டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் விற்பனை மற்றும் விளம்பர பிரிவு துணை தலைவர் அடுல் சூட் தெரிவித்தார்.

google news