டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்திய மோட்டார்சைக்கிள் பிரியர்களிடம் இருந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சர்வதேச வெளியீட்டில் இருந்து சரியாக பத்து நாட்களில் டிரையம்ப் 400 மாடல் 10 ஆயிரம் முன்பதிவு பெற்று புதிய மைல்கல் எட்டியிருக்கிறது. ஜூன் 27 ஆம் தேதி லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டிரையம்ப் ஸ்பீடு 400 மற்றும் ஸ்கிராம்ப்லர் 400 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
இந்த மாடல்கள் இந்திய சந்தையில் அமோக வரவேற்பை பெற்றுள்ளன. முன்பதிவு துவங்கிய நாள் முதலே, வாடிக்கையாளர்கள் தங்களுக்கான யூனிட்-ஐ முன்பதிவு செய்வதில் ஆர்வம் செலுத்தி வந்தனர். டிரையம்ப் ஸ்பீடு மாடல் விலை இந்திய சந்தையில் ரூ. 2 லட்சத்து 33 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இந்திய அறிமுகம் :
இந்தியாவில் இந்த மாடல் ஜூலை 5 ஆம் தேதி தான் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுக சலுகையாக இதன் விலை ரூ. 2 லட்சத்து 23 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று மாற்றுப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த விலை முதலில் வாங்கும் 10 ஆயிரம் பேருக்கு மட்டும் தான் வழங்கப்படும் என்று டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் அறிவித்து இருக்கிறது.
ஏற்கனவே பலர் இந்த மோட்டார்சைக்கிளை வாங்க திட்டமிட்ட நிலையில், அறிமுக சலுகை மேலும் பலரை இந்த மோட்டார்சைக்கிள் வாங்கும் முடிவை எடுக்க வைத்து இருக்கிறது. புதிய ஸ்கிராம்ப்லர் 400 மாடல் அக்டோபர் மாத வாக்கில் ஷோரூம்களுக்கு வர இருக்கிறது. இதன் விலை விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
மகிழ்ச்சி :
மிக குறுகிய காலக்கட்டத்தில் 10 ஆயிரம் முன்பதிவுகளை பெறுவது ரைடர்கள் பஜாஜ் ஆட்டோ மற்றும் டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு சான்றாக அமைந்து இருக்கிறது. டிரையம்ப் மோட்டார்சைக்கிள் வெளியீட்டை தொடர்ந்து கிடைத்திருக்கும் அமோக வரவேற்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அசத்தலான செயல்திறன், டிசைன் மற்றும் தொழில்நுட்பம் கொண்ட தலைசிறந்த மோட்டார்சைக்கிள்களை தொடர்ந்து அறிமுகம் செய்வோம் என்று பஜாஜ் ஆட்டோ லிமிடெட் நிர்வாக இயக்குனர் ராகேஷ் ஷர்மா தெரிவித்து உள்ளார்.
முன்பதிவு செய்வது எப்படி ?
புதிய டிரையம்ப் மோட்டார்சைக்கிளை முன்பதிவு செய்ய வாடிக்கையாளர்கள், அதிகாரப்பூர்வ வலைதளம் சென்று ரூ. 2 ஆயிரம் முன்பணமாக செலுத்த வேண்டும். இவ்வாறு செய்யும் போது வாடிக்கையாளர்கள் புதிய மோட்டார்சைக்கிளை டெலிவரி எடுக்க, காத்திருக்க வேண்டிய கால அளவை குறைக்கும். அமோக வரவேற்பை அடுத்து, இந்த மாடலின் உற்பத்தி பணிகள் வேகப்படுத்தப்பட்டு உள்ளன.
முதலில் முன்பதிவு செய்த 10 ஆயிரம் வாடிக்கையாளர்கள் புதிய ஸ்பீடு 400 மாடலை அறிமுக விலையில் வாங்கிட முடியும். அறிமுகமான பத்து நாட்களில் 10 ஆயிரம் பேர் இந்த மாடலை முன்பதிவு செய்திருப்பதன் மூலம், இதற்கு எந்த அளவுக்கு வரவேற்பு உள்ளதை என்பதை அறிந்து கொள்ள முடியும். வரும் மாதங்களில் ஸ்பீடு 400 மற்றும் ஸ்கிராம்ப்லர் 400 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், எதிர்பார்ப்பு மேலும் அதிகமாகும்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…