Categories: automobilelatest news

கண்ணை கவரும் புதிய மாடல்… Vivo-வில் கலக்கும் மினி சீரியஸ்… முழு விவரம் இதோ…!

விவோ நிறுவனம் புதிதாக விவோ எக்ஸ் 200 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்திருக்கின்றது. இதன் முழு விவரம் மற்றும் சிறப்பம்சங்களை குறித்து இதில் நாம் தெரிந்து கொள்வோம்.

விவோ நிறுவனம் இன்று புதியதாக விவோ எக்ஸ் 200 சீரியஸ் ஸ்மார்ட் ஃபோன்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த சீரியஸில் விவோ எக்ஸ் 200, விவோ எக்ஸ் 200 ப்ரோ மினி மற்றும் விவோ எக்ஸ் 200 ப்ரோ ஆகிய 3 மாடல்களையும் அதன் அம்சங்களையும் அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த மூன்று மாடல்கள் பார்ப்பதற்கு கண்ணை கவரும் வகையில் இருக்கின்றது. இந்த செல்போன்களின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்

புதிய விவோ எக்ஸ் 200 சிறப்பு அம்சம்:

இந்த செல்போன் 6.67 இன்ச் 2800 x 1260 பிக்சல் LTPS AMOLED டிஸ்பிளே கொண்டுள்ளது. 4500 நீட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 120Hz ரெஃப்ரஷ் ரேட் இந்த செல்போனில் இருக்கின்றது. ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 9400 சிப்செட் மற்றும் இமோர்ட்டாலிஸ் G925 GPU – 12GB / 16GB LPDDR5X / LPDDR5X அல்ட்ரா ப்ரோ குவாட் சேனல் கொண்டிருக்கின்றது. 1TB சாட்டிலைட் கம்யூனிகேஷன் எடிஷன் ரேம் இதில் இருக்கின்றது. மேலும் 256GB / 512GB / 1TB UFS 4.0 ஸ்டோரேஜ், ஆண்ட்ராய்டு 15 உடன் ஒரிஜின் ஓஎஸ் 5, 50MP மெயின் கேமரா + 50MP அல்ட்ரா வைடு + 50MP டெலிபோட்டோ போன்றவையும் இதில் உள்ளது. 32MP செல்பி கேமரா, IP69+IP68 ரேட்டிங், 5G SA/NSA, வைஃபை, ப்ளூடூத் (Bluetooth 5.4), ஜிபிஎஸ் (GPS): L1+L5, Beidou: B1C+B1I+B2a+B2b, க்ளோனஸ் (GLONASS): G1, கலிலியோ (Galileo): E1+E5a+E5b உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இந்த செல்போனில் உள்ளன.

புதிய விவோ எக்ஸ் 200 ப்ரோ மினி சிறப்பம்சம் :

விவோ எக்ஸ் 200 செல்போனில் உள்ள பல சிறப்பு அம்சங்கள் இந்த போனிலும் இருக்கின்றது மேற்கூறிய அனைத்து சிறப்பு அம்சங்களும் இன்டஸ்ட் செல்போனில் பெரும்பாலாக ஒரே மாதிரியாக இருக்கும் ஆகையால் மாறுபடும் சிறப்பம்சங்கள் என்னென்னவென்றால் 6.31 இன்ச் அளவு 2640 x 1216 பிக்சல் LTPO AMOLED டிஸ்பிளே கொண்டிருக்கும். 1Hz முதல் 120Hz வரை ரெஃப்ரஷ் ரேட் மாறுபட்டிருக்கும். சிப்செட், ஸ்டோரேஜ், கேமரா, இணைப்பு அம்சங்கள் எல்லாம் ஒரே மாதிரி தான் இருக்கும். மேலும் இதில் 5800mAh பேட்டரி, 90W வயர்டு பிளாஷ் சார்ஜிங், 30W வயர்லெஸ் சார்ஜிங் கூடுதல் சிறப்பம்சங்களாக இருக்கின்றது.

புதிய விவோ எக்ஸ் 200 ப்ரோ செல்போனில் மேற்கூறிய அனைத்து சிறப்பு அம்சங்களும் இந்த செல்போனிலும் அடங்கும் இதில் 6.78″ இன்ச் அளவு 2800 x 1260 பிக்சல் 8T LTPO AMOLED, 0.1Hz முதல் 120Hz ரெஃப்ரஷ் ரேட், 50MP மெயின் கேமரா + 50MP அல்ட்ரா வைடு + 200MP டெலிபோட்டோ போன்றவை மட்டும் மாறுபட்டு இருக்கும்.

புதிய விவோ எக்ஸ்200 சீரியஸ் விலை:

vivo X200 12GB+256GB ரூ. 51,010
vivo X200 12GB+512GB ரூ. 55,750
vivo X200 16GB+ 512GB ரூ. 59,320

vivo X200 Pro mini 12GB+256GB ரூ. 55,750
vivo X200 Pro mini 16GB+ 512GB ரூ. 62,880
vivo X200 Pro mini 16GB+ 1TB ரூ. 68,815

vivo X200 Pro 12GB+256GB ரூ. 62,880
vivo X200 Pro 16GB+ 512GB ரூ. 71,190
vivo X200 Pro 16GB+ 1TB ரூ. 77,120

Ramya Sri

Recent Posts

5 ஓவரில் 120 ரன்கள்.. இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த பாகிஸ்தான் – இது எப்ப நடந்தது?

ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…

3 weeks ago

விஷயம் டாப் சீக்ரெட், ரகசிய மீட்டிங்.. CSK-ல் ரிஷப் பண்ட்.. முன்னாள் வீரர் ஓபன் டாக்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…

3 weeks ago

நான் இருக்கேன்…மீண்டும் நிரூபித்துள்ள ரவீந்திர ஜடேஜா…

இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…

3 weeks ago

குப்பைகளுக்கு குட்-பை சொன்ன சென்னை மாநகராட்சி…ஒரே நாள்ல இவ்ளோவா?…

பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…

3 weeks ago

நழுவ நினைத்த நாகேஷ்…கெளரவப்படுதிய எம்.ஜி.ஆர்…நடந்தது என்ன தெரியுமா?…

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…

3 weeks ago

சாம்பியன் தான் இருந்தாலும் இவங்க மட்டும் போதும்…கோல்கத்தா அணி எடுத்த முடிவு…

ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…

3 weeks ago