Connect with us

automobile

530கிமீ ரேன்ஜ் வழங்கும் வால்வோ C50 ரிசார்ஜ் – இந்தியாவில் அறிமுகம்!

Published

on

Volvo-C40-Recharge

வால்வோ நிறஉவனம் இந்திய சந்தையில் தனது புதிய C40 ரிசார்ஜ் மாடலை அறிமுகம் செய்தது. இதன் வெளியீடு ஆகஸ்ட் மாதம் நடைபெற இருக்கிறதகு. புதிய வால்வோ C40 ரிசார்ஜ் மாடல், இந்திய சந்தையில் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் XC40 ரிசார்ஜ் காரின் சிஸ்டர் மாடல் ஆகும். வால்வோ C40 மாடலின் A-பில்லர் வரையிலான டிசைன் XC40 ரிசார்ஜ் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் ஸ்லோபிங் ரூஃப் மற்றும் கூர்மையான ரேக் செய்யப்பட்ட டெயில்கேட் உள்ளது. காரின் பக்கவாட்டு பகுதியில் இருந்து இவற்றை தெளிவாக காணும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. பின்புறத்தில் ரிவைஸ்டு டெயில் லேம்ப் டிசைன் மற்றும் எக்ஸ்டன்டெட் எல்.இ.டி. லைட்கள் உள்ளன. வால்வோ C40 ரிசார்ஜ் மாடல்- வைட் பியல், ஜார்ட் புளூ, ஃபியுஷன் ரெட், ஆனிக்ஸ் பிளாக், கிளவுட் புளூ மற்றும் சேஜ் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது.

Volvo-C40-Recharge

Volvo-C40-Recharge

காரின் உள்புறத்தில் மினிமலிஸ்ட் இன்டீரியர் தோற்றம் கொண்டிருக்கிறது. இதில் போர்டிரெயிட் வடிவில் பொருத்தப்பட்ட டச்-ஸ்கிரீன் உள்ளது. இத்துடன் ஏ.சி. வென்ட்கள் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் செங்குத்தாக பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த காரின் இன்டீரியர் முழுக்க எங்கும் லெதர் பயன்படுத்தப்படவில்லை என்று வால்வோ தெரிவித்து இருக்கிறது.

வால்வோ C40 ரிசார்ஜ் மாடலில் பானரோமிக் கிளாஸ் ரூஃப், ஹார்மன் கார்டன் சவுன்ட் சிஸ்டம், வயர்லெஸ் போன் சார்ஜர், PM2.5 ஏர் பியூரிஃபயர், கனெக்டெட் தொழில்நுட்பம் மற்றும் ADAS போன்ற வசதிகள் வழங்கப்படுகின்றன. புதிய வால்வோ C40 ரிசார்ஜ் மாடல், XC40 மாடலில் உள்ளதை போன்ற டுவின் மோட்டார் ஆல்-வீல் டிரைவ் பவர்டிரெயின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 402 ஹெச்பி பவர், 660 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

இந்த என்ஜினுடன் 78 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 530 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என்று சான்று பெற்று இருக்கிறது. மேம்பட்ட பேட்டரி மேனெஜ்மென்ட் சிஸ்டம் காரணமாக இந்த காரில் அதிக ரேன்ஜ் கிடைப்பதாக வால்வோ தெரிவித்து உள்ளது. முந்தைய வால்வோ XC40 ரிசார்ஜ் மாடல் முழு சார்ஜ் செய்தால் 418 கிலோமீட்டர்கள் ரேன்ஜ் வழங்குவது குறிப்பிடத்தக்கது.

Volvo-C40-Recharge

Volvo-C40-Recharge

புதிய வால்வோ C40 ரிசார்ஜ் மாடல் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 4.7 நொடிகளில் எட்டிவிடும். இந்த காரை 150 கிலோவாட் டிசி ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் 10-இல் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 27 நிமிடங்களே ஆகும். விலையை பொருத்தவரை வால்வோ C40 ரிசார்ஜ் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் XC40 ரிசார்ஜ் மாடலை விட அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது.

வால்வோ XC40 ரிசார்ஜ் போன்றே, புதிய C40 ரிசார்ஜ் மாடலும் பெங்களூருவில் உள்ள ஆலையில் அசெம்பில் செய்யப்படும் என்று வால்வோ நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இந்த காரின் வினியோகம் செப்டம்பர் மாதம் துவங்குகிறது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *