Categories: automobilelatest news

புதுசா மாருதி கார் வாங்கனுமா? ஜூன் மாத ஆஃபர்களை தவற விடாதீங்க!

மாருதி சுசுகி நிறுவன கார் வாங்க திட்டமிடுகின்றீர்களா? அப்போ அதனை நிறைவேற்றிக் கொள்ள இது தான் சரியான நேரம். மாருதி சுசுகி கார் மாடல்களுக்கு அந்நிறுவனம் அசத்தலான சலுகைகளை அறிவித்து இருக்கிறது. சலுகைகள் தள்ளுபடி மற்றும் பலன்கள் வடிவில் வழங்கப்படுகிறது.

ஜூன் மாதத்திற்கு மாருதி சுசுகி கார் மாடல்களுக்கு அதிகபட்சம் ரூ. 64 ஆயிரம் வரையிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இவை மாருதி சுசுகியின் நெக்சா பிராண்டின் கீழ் விற்பனை செய்யப்படும் கார் மாடல்களுக்கு மட்டும் பொருந்தும். அதன்படி பலேனோ, இக்னிஸ் மற்றும் சியாஸ் போன்ற மாடல்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி போன்ற பலன்கள் வழங்கப்படுகின்றன.

மாருதி சுசுகி இக்னிஸ் | ரூ. 64 ஆயிரம் வரையிலான பலன்கள் :

Maruti-ignis

மாருதி நெக்சா பிராண்டிங்கின் கீழ் கிடைக்கும் என்ட்ரி லெவல் மாடல் தான் இக்னிஸ். ஹேச்பேக் பிரிவில் விற்பனை செய்யப்பட்டு வரும் இக்னிஸ் மாடலை தேர்வு செய்வோருக்கு ரூ. 35 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 25 ஆயிரம் வரை எக்சேன்ஜ் போனஸ் மற்றும் ரூ. 4 ஆயிரம் வரையிலான கார்ப்பரேட் பலன்கள் வழங்கப்படுகிறது. இந்த காரை வாங்குவோருக்கு ரூ. 64 ஆயிரம் வரையிலான பலன்கள் கிடைக்கும்.

இந்திய சந்தையில் இக்னிஸ் மாடல் : 

மாருதி சுசுகி ஸ்விஃப்ட், ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் மற்றும் டாடா டியாகோ போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. மாருதி இக்னிஸ் மாடலின் விலை ரூ. 5 லட்சத்து 84 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 8 லட்சத்து 16 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

மாருதி சுசுகி சியாஸ் | ரூ. 33 ஆயிரம் வரையிலான பலன்கள் :

Maruti ciaz

நெக்சா பிராண்டிங்கில் கிடைக்கும் பழைய கார் சியாஸ் ஆகும். மாருதி சுசுகி சியாஸ் வாங்குவோருக்கு ரூ. 30 ஆயிரம் எக்சேன்ஜ் பலன்கள், ரூ 3 ஆயிரம் வரையிலான கார்ப்பரேட் தள்ளுபடி என மொத்தம் 33 ஆயிரம் ரூபாய் சேமிப்பு வழங்கப்படுகிறது.

மாருதி சியாஸ் மாடலில் 105 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்ட 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் மாருதி சியாஸ் மாடல் ஹோண்டா சிட்டி, ஸ்கோடா ஸ்லேவியா, ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் மற்றும் முற்றிலும் புதிய ஹூண்டாய் வெர்னா மாடல்களுக்கு போட்டியாக அமைகின்றன.

மாருதி சுசுகி பலேனோ | ரூ. 35 ஆயிரம் வரையிலான சலுகைகள் :

Maruti-Baleno

மாருதி நெக்சா விற்பனையாளர்கள் புதிய பலேனோ மாடலை  வாங்குவோருக்கு ரூ. 35 ஆயிரம் வரையிலான பலன்களை வழங்குகின்றனர். இதன் டெல்டா மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் வேரியண்ட்களை வாங்குவோருக்கு ரூ. 20 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 15 ஆயிரம் வரையிலான எக்சேன்ஜ் சலுகை வழங்கப்படுகிறது. காரின் மற்ற வேரியண்ட்களுக்கு ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 15 ஆயிரம் எக்சேன்ஜ் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதே பலன்கள் அனைத்து CNG வேரியண்ட்களுக்கும் வழங்கப்படுகிறது.

மாருதி பலேனோ மாடலில் 90 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 5 ஸ்பீடு AMT கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. CNG மோடில் இந்த என்ஜின் 77.5 ஹெச்பி பவர் வெளிப்படுத்துகிறது. இந்திய சந்தையில் டாடா அல்ட்ரோஸ், ஹூண்டாய் i20 மற்றும் டொயோட்டா கிளான்சா போன்ற மாடல்களுக்கு பலேனோ போட்டியாக அமைகிறது. இதன் விலை ரூ. 6 லட்சத்து 61 ஆயிரம் என்று துவங்கி, அதிகபட்சம் ரூ. 9 லட்சத்து 88 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

admin

Recent Posts

5 ஓவரில் 120 ரன்கள்.. இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த பாகிஸ்தான் – இது எப்ப நடந்தது?

ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…

3 weeks ago

விஷயம் டாப் சீக்ரெட், ரகசிய மீட்டிங்.. CSK-ல் ரிஷப் பண்ட்.. முன்னாள் வீரர் ஓபன் டாக்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…

3 weeks ago

நான் இருக்கேன்…மீண்டும் நிரூபித்துள்ள ரவீந்திர ஜடேஜா…

இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…

3 weeks ago

குப்பைகளுக்கு குட்-பை சொன்ன சென்னை மாநகராட்சி…ஒரே நாள்ல இவ்ளோவா?…

பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…

3 weeks ago

நழுவ நினைத்த நாகேஷ்…கெளரவப்படுதிய எம்.ஜி.ஆர்…நடந்தது என்ன தெரியுமா?…

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…

3 weeks ago

சாம்பியன் தான் இருந்தாலும் இவங்க மட்டும் போதும்…கோல்கத்தா அணி எடுத்த முடிவு…

ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…

3 weeks ago