Connect with us

automobile

இந்தியாவுக்காக புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உருவாக்கும் யமஹா – வெளியீடு எப்போ தெரியுமா?

Published

on

Yamaha-Logo

யமஹா இந்தியா தலைவர் ஈஷின் சிஹானா, நியோஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருவதாக தெரிவித்து இருந்தார். எனினும், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் யமஹா தனது நியோஸ் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்யாது என்றே கூறப்படுகிறது. இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மானியம் குறைக்கப்பட்டு இருப்பதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று தெரிகிறது.

நியோஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் மேம்பட்ட மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய யமஹா நிறுவனம் திட்டமிட்டு வந்தது. மேலும் இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 37 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என்று சிஹானா தெரிவித்து இருந்தார். தற்போது இந்திய சந்தையில் போட்டியை எதிர்கொள்ள இது போதுமானதாக இருக்காது.

yamaha-neos-ev

yamaha-neos-ev

இந்திய எலெக்ட்ரிக் வாகன வாடிக்கையாளர்களை உற்று நோக்கும் போது, இவர்களின் தேவை ஐரோப்பிய வாடிக்கையாளர்களை விட வித்தியாசமாக இருக்கிறது. “இந்தியாவில், மிக குறைந்த பராமரிப்பு கட்டணம் தான் பிரதானமாக இருக்கிறது. பெட்ரோல் விலை உயர்வு காரணமாக, மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குகின்றனர். இதன் காரணமாக சுவாரஸ்யம் நிறைந்த, அழகிய மற்றும் ஸ்போர்ட் தோற்றம் கொண்ட மாடலை உருவாக்க கவனம் செலுத்தி வருகிறது,” என்று சிஹானா தெரிவித்தார்.

இதன் மூலம் யமஹா நிறுவனம் இந்தியாவுக்காக வேற லெவல் அம்சங்கள் நிறைந்த எலெக்ட்ரிக் வாகனத்தை உருவாக்கி வருவதாக தெரிகிறது. அதிக யூனிட்களை உற்பத்தி செய்வதோடு பிரான்டு பெருமையை நிலை நிறுத்துவதில் கவனம் செலுத்த இருக்கிறோம் என்றும், இதன் காரணமாக தான் நியோஸ் மாடலில் இருந்து எங்களது கவனத்தை திருப்பி இருக்கிறோம். இதனால், விரைந்து புதிய மாடலை அறிமுகம் செய்யாமல், தேவையான நேரத்தை எடுத்துக் கொண்டு முற்றிலும் புதுமை மிக்க வாகனத்தை அறிமுகம் செய்வோம் என்று யமஹா தெரிவித்துள்ளது.

yamaha-neos-ev-1

yamaha-neos-ev-1

இந்தியாவுக்கான புதிய எலெக்ட்ரிக் வாகனம் உருவாக்கும் பணிகளை யமஹா ஏற்கனவே துவங்கி விட்டது. புதிய வாகனம் தயாராக கிட்டத்தட்ட இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை ஆகும் என்று தெரிகிறது. இந்த தகவல் பலருக்கும் ஏமாற்றத்தை கொடுக்கும். அந்த வகையில் தற்போதைய தகவல்களின் படி யமஹா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகனம் அறிமுகமாக மேலும் சில காலம் ஆகும்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *