வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 150 ரன்களுக்கு 10 விக்கெட்களை இழந்தது. பிறகு இந்திய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்பிற்கு 421 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. பிறகு பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 130 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதன் மூலம் இந்திய அணி 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்நிலையில் முதல் இன்னிங்ஸில் அஸ்வின் மொத்தமாக 5 விக்கெட்டுகள் எடுத்து பல சாதனைகளை படைத்திருந்தார். அதனை தொடர்ந்து நேற்று இரண்டாவது இன்னிங்ஸின் போது மொத்தமாக 7 விக்கெட்கள் வீழ்த்தி எதிரணியான வெஸ்ட் இந்தியன்ஸ் அணியை அதிர வைத்தார் என்றே கூறலாம் .
இவர் இரண்டு இன்னிங்ஸில் 12 விக்கெட் எடுத்ததன் மூலமும் பல சாதனைகளையும் படைத்துள்ளார். அது என்ன சாதனை என்றால், இந்திய அணிக்காக அதிக விக்கெட் எடுத்த சுழற் பந்துவீச்சாளர் என்ற சாதனையை மொத்தமாக 709 விக்கெட் எடுத்ததன் மூலம் அஸ்வின் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். இதற்கு முன்பு இரண்டாவது இடத்தில் ஹர்பஜன் சிங் 707 விக்கெட்டுகள் எடுத்து இருந்த நிலையில் தற்போது அவரை பின்னுகு தள்ளி அஸ்வின் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இந்த சாதனை மட்டுமின்றி டெஸ்ட் போட்டியில் அதிகமுறை (8 முறை) 10 விக்கெட்களை வீழ்த்திய இந்திய வீரர் என்ற அனில் கும்ப்ளேவின் சாதனையை சமன் செய்துள்ளார். மேலும், இந்தியாவிற்காக அதிக முறை விக்கெட் எடுத்தவர் என்ற பட்டியலில் 953 விக்கெட்டுகள் எடுத்து அணில் கும்ப்ளே முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…