Categories: Cricket

அவுங்க 3 பேரு போதும்…அடுத்தடுத்த போட்டிகளிலும் வெல்வோம்! கெத்தாக பேசிய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஸ்பீச்!

வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி இரண்டு டெஸ்ட் மூன்று ஒரு நாள் போட்டி ஐந்து டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது இதில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்ற  நிலையில் அடுத்ததாக டி20 தொடர் நேற்று தொடங்கியது.

நேற்று தொடங்கிய முதல் டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 149 ரன்கள் அடித்திருந்தது. அடுத்ததாக 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. தொடக்கத்தில் அருமையாக விளையாடி வந்த இந்திய அணி அடுத்தடுத்ததாக தொடர்ச்சியாக விக்கெட் இழந்த காரணத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 145 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. இந்த போட்டி முடிந்த பிறகு பேசிய  வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரௌமேன் பௌல் ‘இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பே நாங்கள் தொடரை வெற்றியுடன் தொடங்க வேண்டும் என்று தான் முடிவு செய்தோம்.

எங்களுடைய அணி வீரர்கள் அனைவரும் இந்த டி20 தொடரின் முதல் போட்டியில் அருமையாக விளையாடினார்கள். அதேபோல எங்களுடைய அணியின் பந்துவீச்சாளர் ஹோல்டர் அருமையாக பந்து வீசினார் எங்களுடைய அணியில் மூன்று இடது கை வீரர்கள் இருந்த காரணத்தினால் இந்திய இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர்களை சரியாக எதிர்கொள்ள முடிந்தது.

சற்று சவாலாக இருந்தாலும் நாங்கள் எங்களுடைய வேலையை சிறப்பாக செய்து எங்களுடைய அணியை வெற்றி பெற வைத்துள்ளோம் என நம்புகிறேன். இதே போலவே பூரன், ஹெட்மையர், கைல் மேய்ர்ஸ் இவர்கள் மூன்று பேரும் அடுத்தடுத்த போட்டியில் அணியில் இருந்தால் போதும் இந்திய அணியின் சுழற்சிளர்களை எதிர்கொள்ள எங்களுக்கு பக்க பலமாக இருக்கும். முதல் போட்டியில் வெற்றி பெற்றது போல அடுத்ததாக வரும் போட்டியிலும் கண்டிப்பாக வெற்றி பெறுவோம்’ எனவும் கூறியுள்ளார்.

Web Desk

Recent Posts

5 ஓவரில் 120 ரன்கள்.. இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த பாகிஸ்தான் – இது எப்ப நடந்தது?

ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…

3 weeks ago

விஷயம் டாப் சீக்ரெட், ரகசிய மீட்டிங்.. CSK-ல் ரிஷப் பண்ட்.. முன்னாள் வீரர் ஓபன் டாக்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…

3 weeks ago

நான் இருக்கேன்…மீண்டும் நிரூபித்துள்ள ரவீந்திர ஜடேஜா…

இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…

3 weeks ago

குப்பைகளுக்கு குட்-பை சொன்ன சென்னை மாநகராட்சி…ஒரே நாள்ல இவ்ளோவா?…

பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…

3 weeks ago

நழுவ நினைத்த நாகேஷ்…கெளரவப்படுதிய எம்.ஜி.ஆர்…நடந்தது என்ன தெரியுமா?…

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…

3 weeks ago

சாம்பியன் தான் இருந்தாலும் இவங்க மட்டும் போதும்…கோல்கத்தா அணி எடுத்த முடிவு…

ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…

3 weeks ago